பக்கம்:மதன கல்யாணி-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 209

அதைக் கேட்டு, சகிக்க மாட்டாத அருவருப்பும் கோபச் சிரிப்பும் கொண்ட துரைராஜா பதைபதைத்தவனாய், “ஏதேது. இது மலை முழுங்கி மஹாதேவ சாமியின் கதையாக இருக்கிறதே! இந்தப் பதக்கம் இருக்கட்டும். இதோ இந்த இரண்டு கடிதங் களையும் எழுதி எனக்கு அனுப்பியது யார் என்பதாவது நினைவுக்கு வருகிறதா? யோசித்துப் பாருங்கள்” என்று கூறிய வண்ணம், துரையம்மாளால் எழுதப்பட்ட இரண்டு கடிதங் களையும் எடுத்துப் பிரித்துக் காட்ட, அவைகளைக் கண்ட கல்யாணி யம்மாள், “கடிதங்களா! எங்கே இப்படிக் கொடு; யார் எழுதின கடிதங்கள்?” என்று கேட்ட வண்ணம் தனது கையை நீட்டினாள்.

துரைராஜா அவைகளைக் கொடுக்காமல் பிரித்துத் தனது கையிலேயே வைத்துக் கொண்டு, “இவைகளைக் கொடுத்து விட்டால் திரும்பி என்னிடம் வருமா! எனக்கு இன்னம் அவ்வளவு தூரம் பைத்தியம் பிடிக்கவில்லை; இதோ நானே வைத்துக் கொண்டு காட்டுகிறேன்; பாருங்கள். இதோ இருக்கிறதே இதுதான் துரையம்மாள் பார்க் உத்தியாவனத்தில் வந்து தன்னைச் சந்திக்கும்படி எழுதியது. அதன் பிறகு, அன்றைய இரவில் அவள் வந்து என்னோடு உட்கார்ந்து பேசிவிட்டுப் போன பிறகு, வீணை வித்துவானுடைய பெயரையும் விலாசத்தையும் எழுதி அனுப்பிய கடிதம் இன்னொன்று; முதல் கடிதத்தோடு 500 ரூபாய் நோட்டொன்றும், இரண்டாவது கடிதத்தோடு 1000-ரூபாய் நோட்டொன்றும் இருந்தன. இப்போதாவது விஷயம் நினைவிற்கு வருகிறதா? என்ன, உதட்டைப் பிதுக்குகிறீர்களே! உண்மையாகவே துங்குகிற ஒரு மனிதனை நாம் எப்படியாவது எழுப்பி விடலாம். துங்குவதாகப் பாசாங்கு செய்கிறவனை எழுப்ப முடியாதல்லவா? இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளக் கூடாதென்று நீங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கையில் நான் எத்தனை ருஜூக்களைக் காட்டினாலும், உங்களுக்கு அந்த விஷயம் நினைவுக்கு வரப்போகிறதா!” என்று மிகவும் புரளியாகப் பேசினான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் தனது முகத்தை மிகவும் கடுமையாகவும், அருவருப்புத் தோன்றவும் வைத்துக் கொண்டு, அவனது கையில் இருந்த இரண்டு கடிதங்களில் இருந்த சங்கதிகளை எல்லாம் விரைவாகப் படித்து உணர்ந்து கொண்ட பின்னர் மிகவும் கோபமாக, “சரி, சரி; இதெல்லாம் பைத்தியத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/213&oldid=646019" இலிருந்து மீள்விக்கப்பட்டது