பக்கம்:மதன கல்யாணி-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மதன கல்யாணி

கோளாறுதான்; வேறொன்றுமில்லை; இந்தப் பத்து நிமிடி நேரமாக, நான் மிகுந்த பொறுமையோடு, உன்னுடைய பிதற்றல்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். வாயால் பிதற்றுவதற்கிணங்க, ஏதேதோ கடிதங்களையும் தயார் படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது. இதுவும் ஒருவித நூதனமான பைத்தியம் போலிருக்கிறது! போதும், இவ்வளவோடு நிறுத்திக்கொள். என்னுடைய ஜோலி எல்லாம் கெடுகிறது” என்று அழுத்தமாகக் கூறினாள்.

உடனே துரைராஜா தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து இன்னொரு கடிதத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் ஒரு பாகத்தை மாத்திரம் கல்யாணியம்மாளிற்கருகில் பிடித்த வண்ணம், “சரி; நான் சொன்ன சங்கதிகள் எல்லாம் உளற லாகவே இருக்கட்டும். நான் ஒரே ஒரு சந்தேகம் உங்களிடத்தில் கேட்கிறேன். அதை மாத்திரம் நீங்கள் சொல்லி விடுங்கள். அதற்கு மேல் நான் அதிகமாக உங்களைத் தொந்திரவுக்கு ஆளாக்குவ தில்லை. இந்தக் கடிதத்தின் எழுத்து யாருடையதென்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதோ கீழே போடப்பட்டிருக்கும் கையெழுத்தைப் பாருங்கள். யாருடைய பெயர் இருக்கிறது?” என்று வினாவிய வண்ணம் கடிதத்தின் கடைசிப் பாகத்தைக் காட்டினான்.

அது இன்ன கடிதம் என்பதை உணராத கல்யாணியம்மாள், தனக்குள்ளாகவே பெரிதும் கவலையும் கலக்கமும் அடைந்தாள் ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்தக் கடிதத்தின் கடைசியில், “இங்ஙனம் ஆருயிர் நண்பன், மாரமங் கலம்-துரை” என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு சிறிது தயங்கி, “ஏன்? இதில் என்ன சந்தேகம்? இதில் நம்முடைய மைனர் தம்பியின் கையெழுத்திருக்கிறது” என்றாள். .

அதைக் கேட்ட துரைராஜா மகிழ்ச்சி அடைந்தவனாய், “நல்ல வேளை தான் அவ்வளவு தூரமாவது ஒப்புக் கொள்ளுகிறீர்களே! அதுவே போதுமானது. இந்தக் கடிதத்தின் வரிகளைப் பாருங்கள்: இது மைனரால் எழுதப்பட்டதல்லவா?” என்று கூறிய வண்ணம், அந்தக் கடிதத்தின் மேல் பாகத்திலிருந்த வரிகளைக் காட்ட, அதை உற்று நோக்கிய கல்யாணியம்மாள் அது தன்னை என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/214&oldid=646021" இலிருந்து மீள்விக்கப்பட்டது