பக்கம்:மதன கல்யாணி-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 i

விபரீதத்தில் கொண்டு போய்விடுமோ என்ற கலக்கமும் குழப்பமும் அடைந்தவளாய்ச் சிறிது நேரம் தயங்கி, “ஆம், இது மைனருடைய எழுத்தைப் போலத்தான் இருக்கிறது. இந்தக் கடிதத்தில் என்ன விசேஷம் இருக்கிறது? இது யாருக்கு எழுதப் பட்டது?” என்று அலட்சியமாகக் கேட்டாள்.

உடனே துரைராஜா புன்னகை செய்து பரிகாசமாகப் பேசத் தொடங்கி, “அவசரமான பல ஜோலிகளை விட்டு, என்னோடு பேசிக் கொண்டிருக்கும் உங்களிடத்தில் நான் இதைக் காட்டத் துணிந்தால், இதில் ஏதாவது விசேஷம் இல்லாமல் இருக்குமா! அந்த விசேஷத்தை நான் வாயால் சொன்னால், அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அது ஆட்சேபனை சமாதானங்களுக்கெல்லாம் இடம் கொடுக்கும். ஆகையால் நான் இந்தக் கடிதத்தை அப்படியே பூர்த்தியாக வாசித்துக் காட்டி விடுகிறேன். நீங்கள் தான் விஷயத்தை என்னிடத்தில் வெளியிடக் கூடாதென்று மறைத் தாலும், நானும் அப்படிச் செய்ய மாட்டேன். இந்தக் கடிதத்தில் அநேகம் ரகசியங்கள் இருக்கின்றன; இருந்தாலும் பரவாயில்லை படிக்கிறேன்; கேளுங்கள். மைலாப்பூரில் பாலாம்பாளுடைய பங்களாவில் இருக்கும் மைனர், இந்தக் கடிதத்தை ஒரு பெண் பிள்ளையினிடத்தில் கொடுத்து எனக்கு அனுப்பினார். படிக்கி றேன், தயவு செய்து கேட்க வேண்டும்” என்று கூறி, அன்று காலையில் குப்பம்மாளால் கொடுக்கப்பட்ட கடிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு அடியில் வருமாறு படிக்கத் தொடங்கினான்:

என்னுடைய ஆருயிர் நண்பனான துரைராஜாவுக்கு, மாரமங்கலம் மைனர்-துரை எழுதுவது: உபயக்ஷேமம்.

என்னுடைய கண்மணியான பாலாம்பாள் போன்ற அரிய மாணிக்கத்தை நான் இதுவரையில் கண்டதே இல்லை. அழகிலும், குணத்திலும், புத்திசாலித்தனத்திலும், என் மனசுக் கியைந்தபடி நடந்து கொள்ளும் நாயக வாத்சல்யத்திலும், கனவிலும் பிறனை நினைக்காத பதிவிரதா குணத்திலும், அவளுக்கிணையான வேறே பெண் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களிலும் இருக்க மாட்டாள் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை என்னை விட்டு ஒரு நொடி நேரம் பிரிந்திருக்க அவளும் சகிக்க மாட்டாள். எனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/215&oldid=646022" இலிருந்து மீள்விக்கப்பட்டது