பக்கம்:மதன கல்யாணி-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213

எட்டியது; அவர்கள் இந்தக் கட்டையன் குறவனேயன்றி, அந்த ஈசுவரனையே அனுப்பினாலும், அவர்களுடைய கெட்ட எண்ணம் நிறைவேறாதபடி தடுத்துவிட ஏற்பாடு செய்திருக்கி றேன். நான் அனுபவிக்கும் பரமாநந்த சுகத்தைக் கெடுக்க எத்தனிக்கும் மனிதர் எவராக இருந்தாலும், அவர்கள் எனக்குத் திராப் பகைவர்கள் தான்; அவர்களுக்கு நான் என்னாலான தீங்கைச் செய்தே தீருவேன்.

நேற்று காலையில் நான் என்னுடைய அம்மாளிடத்தில் பேசி விட்டு வரும் போது, தெய்வச் செயலாக இன்னொரு புதிய விஷயம் எனக்குத் தெரிந்தது; அந்த விஷயத்தைக் காண, அப்படி யும் நடக்குமா என்ற வியப்பும் திகைப்பும் குடிகொண்டன; பாலாம்பாளுக்கு விலையுயர்ந்த நல்ல சேலைகளும், ரவிக்கை களும் கொணர்ந்து கொடுக்க வேண்டும் என்று என் மனசில் ஆசை உண்டாயிற்று. ஒவ்வொன்று ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் பெறக்கூடிய எண்ணிறந்த சேலைகள், அம்மாளுடைய உடுப்புப் பெட்டிகளில் இருக்கின்றன; அவைகளில் முதல்தரமானவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத் தோடு, நான் உடுப்புப் பெட்டிகளிருந்த அறைக்குள் நுழைந்து முன்னாகவே நான் தந்திரமாக அபகரித்து வைத்துக் கொண்டிருந்த திறவுகோல்களை எடுத்து, பெட்டிகளை எல்லாம் திறந்து, எனக்கு வேண்டியவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெட்டியினடியில் காகிதத்தால் மிகவும் ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமுட்டையைக் கண்ட உடனே, என் மனசில் அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று; நான் அதை உடனே எடுத்துப் பிரித்துப் பார்க்கிறேன்! ஆகா! அதை என்னவென்று சொல்லுவேன்! அப்போது நான் என்னுடைய கண்களையே நம்பவில்லை; அந்த மூட்டைக்குள் வெள்ளைக்கார துரைஸானி அணிந்து கொள்ளக் கூடிய உடைகள் ஒரு ஜோடிப்பு இருந்தன. நான் அவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். பார்க்கு பேர் (Park Fair) தினத்தன்று, ரகசியமாகவும், பெயரை மறைத்தும் உனக்குக் கடிதம் எழுதி, அதன்படி வந்து உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் அணிந்திருந்த உடைகள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/217&oldid=646026" இலிருந்து மீள்விக்கப்பட்டது