பக்கம்:மதன கல்யாணி-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மதன கல்யாணி

அப்படியே இருந்தன. அந்த உடைகள் எல்லாம் அம்மாளுடைய பெட்டிக்குள் இருக்க வேண்டிய காரணம் என்ன என்பதை நான் நேற்று முழுதும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அந்த விஷயத்தில் என்னுடைய அம்மாளும் எந்த விதத்திலோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. அவர்கள் என் விஷயத்தில் இது வரையில் எவ்வளவோ கொடுமையாக நடந்திருந்தாலும், அவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற தயாள நினைவினால், நான், அந்த உடைகளைக் கண்ட விவரத்தை எல்லாம் வேறே எவரிடத் திலும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன். அவர்கள் பத்திர விஷயத்தில் செய்ய நினைத்திருக்கும் தீங்கைப் பற்றி இன்று காலையில் கேள்விப்பட்ட பிறகு, அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போடுவதோடு, இன்னமும் என்னால் ஏன்ற தீங்கை அவர்களுக்கு நான் உடனே செய்து தீரவேண்டும் என்ற ஒரு கொதிப்பும் என் மனசில் உண்டாகிவிட்டது. ஆகையால், நான் அந்த வெள்ளைக்கார உடைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி, இந்த வேலைக்காரியிடம் கொடுத்து உன்னிடத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். உன் மனசை மயக்கிய போலி வெள்ளைக் காரி யார் என்பதை அறியமாட்டாமல், நீ தவித்திருப்பவன் ஆகையால், இந்த உடைகளின் உதவியாலும், உனக்கு வந்த இரண்டு கடிதங்களைக் கொண்டும், இந்த உடைகள் எங்களு டைய பங்களாவில் இருந்தன என்ற விஷயத்தைக் கொண்டும், அந்த ஸ்திரீயார் என்பதை நீ அறிந்து கொள்ளலாம். இந்த விஷயத் தினால், என்னுடைய அம்மாளுக்கு எவ்விதமான இழிவும் அவமானமும் நேருவதானாலும், அது எனக்கு சம்மதமானதே; இது சம்பந்தமாக நீதக்க முயற்சி செய்து, என்னுடைய அம்மாளை நன்றாக அவமானப்படுத்தி, ஊரார் சிரிக்கும்படி செய்தால், என் மனம் நிரம்பவும் குளிரும்.

இது நிற்க, இன்னொரு சந்தோஷ சங்கதி என்னவென்றால், நான் பாலாம்பாளிடத்தில் உன்னைப் பற்றி மிகவும் புகழ்ச்சியாகப் பேசி இருக்கிறேன். நீ என்னுடைய ஆருயிர் நண்பன் என்றும், உன்னை மாத்திரம் நான் அடிக்கடி இந்த பங்களாவுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்கு அவள் ஆட்சேபனை சொல்லாமல் இருக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/218&oldid=646028" இலிருந்து மீள்விக்கப்பட்டது