பக்கம்:மதன கல்யாணி-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, : 3538 s

216 மதன கல்யாணி

இரண்டகம் செய்திருப்பாளோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், அவளுக்கும் மைனருக்கும் ஜென்மப் பழியாக இருந்து வந்ததென்பது தெரிந்த விஷயம் ஆதலால், அவள் வெளியிட் டிருக்க மாட்டாள் என்று, அந்தச் சீமாட்டியின் மனது சமாதானம் செய்து கொண்டது. ஒருகால், கருப்பாயியாகிலும், கட்டையன் குறவனாகிலும், அவர்களோடு பழகும் வேறே மனிதராகிலும், மைனரிடத்தில் பெருத்த பணத்தொகையைப் பெறலாம் என்ற நினைவினால், ரகசியத்தை அவனிடத்தில் வெளியிட்டிருப்பார் களோ என்ற இன்னொரு சந்தேகமும் தீராமல் வருத்திக் கொண்டி ருந்தது. அது நிற்க, தனது ஆள் மாகாணங்களில் யாராவது ஒளிந்திருந்து, தாம் பேசியதை எல்லாம் கேட்டு, தமக்கு விரோத மாக அதை உபயோகித்திருப்பார்களோ என்ற ஐயமும் கவலை யும் எழுந்து உலப்பத் தொடங்கின. ரகசியம் எவரால் வெளியிடப் பட்டிருந்தாலும், அதன் பலனாக, தனது கருத்து நிறைவேறாமல் போனதோடு, மைனர் பலவகையில் தனக்குத் தீம்பும், அவமானமும் தேடி வைக்கும்படியான நிலைமைக்குத் தான் வந்து விட்டதைக் கண்டு, கால்மணி நேரம் வரையில் விசனக்கடலில் ஆழ்ந்து துன்புற்றுக் கிடக்க, அதன் பிறகு அவளது மனநிலைமை ஒருவாறு தெளிவுபட்டது. தனக்கெதிரில் துரைராஜா உட்கார்ந் திருக்கிறான் என்ற உணர்வும் உண்டாகவே, கல்யாணியம்மாள் உடனே கனைத்துக் கொண்டு நிமிர்ந்து துரைராஜாவை முன்னிலும் அதிகரித்த அருவருப்போடு கொடுரமாகவும் நோக்கி, “அப்பா தம்பி நீ இப்படிப்பட்ட கடிதத்தைப் படிக்கப் போகிறாய் என்பது முதலிலேயே தெரியாமல் போய்விட்டது. பெரியவர்கள் ஆயிற்றே, அவர்களிடத்தில் இன்ன விஷயங்களைத் தான் பேசலாம், இன்னதைப் பேசக்கூடாது என்ற கூச்சமும், பயமும் உங்கள் இரண்டு பேருக்கும் இல்லாமல் போய்விட்டன அல்லவா? எனக்கு ஒரு பிள்ளையும், மீனாகூஜியம்மாளுக்கு ஒரு பிள்ளையும் நன்றாக வந்து வாய்த்தீர்கள்! அவனுக்கு பாலாம்பாளும் உனக்கு மோகனாங்கியும் அகப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் நீங்கள் இரண்டு பராசக்திகளாக அல்லவா மதித்து, வெட்கம் மானம் லஜ்ஜை எல்லாவற்றையும் துறந்து, கடிதம் எழுதி அதைக் கொண்டு வந்து, பெரியவர்களிடத்தில் எல்லாம் படித்துக் காட்டிக் காட்டி மகா பெருமையடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/220&oldid=646033" இலிருந்து மீள்விக்கப்பட்டது