பக்கம்:மதன கல்யாணி-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219

கற்பனைகளை எல்லாம் தீர்மானித்து அயோக்கியத் தனம் செய்து கொண்டு திரிகிறீர்கள்; அவைகளுக்கெல்லாம் நானா சளைக்கிறவள் உங்களால் ஆனதைப் பாருங்கள். சரி; இவ்வளவு தானே சங்கதி; வேறே ஒன்றுமில்லையே? இனிமேலாவது நான் என்னுடைய ஜோலிகளைக் கவனிக்க விடுவாய் அல்லவா? இனி ஒரு விநாடி நேரம்கூட இந்த மாதிரியான வீண் விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க எனக்கு இஷ்டமில்லை. நீ போகலாம்” என்று முறுக்காகவும் அதிகாரத்தோடும் கூறிக் கொண் டெழுந்தாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட துரைராஜாவும் மிகுந்த ஆத்திரத்தினால் படபடப்படைந்தவனாய் எழுந்து நின்று, “இந்த மாதிரி அதட்டி ஓங்கிப் பேசிவிட்டால் உங்களுடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையானவை என்று எல்லோரும் எண்ணி விடுவார்கள் என்றும், உங்களுடைய கட்சி ஜெயித்து விடும் என்றும் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இந்த உருட்டல்கள் எல்லாம் இந்த பங்களாவுக்குள்ளே மாத்திரந்தான் செல்லும். இந்த விஷயம் வெளிக்குப் போகுமானால், உங்கள் வார்த்தைகளுக்கு எவ்வளவு மதிப்பு ஏற்படுகிறதென்பது அப்போது தெரியும். வீணை வித்துவானான அந்த மதனகோ பாலன் உங்களிடத்தில் ஏதோ தகாதபடி நடந்து கொண்டான் என்று நீங்கள் வெளியிட்டு, ஊரில் உள்ள பங்களாக்களுக்கெல்லாம் போய் விளம்பரப் படுத்திக் கொண்டது, என் மனசில் அப்போதே ஒருவித சந்தேகத்தை உண்டாக்கியது. ஓர் ஆண் பிள்ளை, இந்த மாதிரி தவறாக நடந்திருந்தாலும், அவனால் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளை நல்ல பதிவிரதையாக இருந்தாலும், அந்த விஷயத்தை அவசிய மாக யார் அறிந்து கொள்ள வேண்டுமோ அவர்களிடத்தில் மாத்திரம் மிகுந்த கூச்சித்தோடு வெளியிடுவாளேயன்றி, இப்படி வீடுவீடாக நுழைந்து நுழைந்து, தனது கற்பைப் பற்றி பறைசாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, அவன் மேல் குற்றம் இருக்காதென்பதும், அவனுடைய பிழப்பைக் கெடுத்து அவனை ஒட்டிவிட உறுதி செய்து கொண்டே அப்படிச் செய்தீர்கள் என்பதும், அப்போதே சிலருடைய மனசில் தோன்றின. வேறே தக்க ஆதாரம் இல்லாமல், அதை நிச்சயமாக நம்ப முடியாமல் இருந்தது; இப்போது கிடைத்துள்ள இத்தனை ருஜூக்களை வைத்துக் கொண்டு யோசிக்க யோசிக்க உங்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/223&oldid=646038" இலிருந்து மீள்விக்கப்பட்டது