பக்கம்:மதன கல்யாணி-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மதன கல்யாணி

அந்தரங்கமான கருத்து இன்னதென்பது தெளிவாக விளங்குகிறது. அவன் தன்னுடைய வழக்கப்படி எல்லா பங்களாவுக்கும் போவானாகில், அவனுடைய விஷயத்தில் நீங்கள் சொன்ன கட்டுக்கதை முழுதும் தவறானதென்று மறுத்து அவன் உண்மையை வெளியிட்டு விடுவானே என்ற பீதி உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது; அதற்காக என்ன செய்தீர்கள் என்றால், யாராவது ஒரு மனிதன் மூலமாக அவனை அடித்து, அவன் ஆறுமாச காலத்துக்கு வெளியில் வராதபடி செய்துவிடத் தீர்மானித்தீர்கள்; அதை உங்களுடைய வேலைக்காரர்களைக் கொண்டு செய்விக்க உங்களுக்குத் துணிவு ஏற்ப்ட வில்லையோ, அல்லது அப்படிச் செய்தால், அவர்கள் உண்மையை உடனே யூகித்துக் கொண்டு, உங்களைப் பற்றி மிகவும் கேவலமான அபிப்பிராயம் கொண்டுவிடப் போகிறார்கள் என்ற பயத்தினாலோ, நீங்கள் இந்தக் காரியத்தை வேறொருவனைக் கொண்டு செய்யத் தீர்மானித்துக் கொண்டீர்கள்; அந்த மனிதன் உங்களை யார் என்று கண்டுகொள்ளாமல் இருக்கவும் வேண்டும், அவன் இந்தக் காரியத்தைத் தவறாமல் செய்யவும் வேண்டும் என்று நினைத்து, அதற்குத் தகுந்த மனிதன் யார் என்று பார்த்தீர்கள். பெண்கள் விஷயத்தில் மோகங் கொண்டலைகிற மனிதனே இதற்குத் தகுந்த கருவி என்று நினைத்து, அப்படி அலைகிறவனான துரைராஜாவே கழுவுக்கேற்ற கோமுட்டி என்று நினைத்து, மகா யூகமாகவும் தந்திரமாகவும் இந்த இரண்டு கடிதங்களையும் எழுதியதன்றி, நேரிலும் வந்து, கேவலம் தாசி போலத் தளுக்குகள் எல்லாம் காட்டி, மனிதனை மோக வலையில் வீழ்த்தி, நீங்கள் சொன்னபடி எல்லாம் தலைவிரித்தாடும்படி செய்துவிட்டு வந்தீர்கள்; இப்போது உங்களுடைய கருத்து நிறைவேறி விட்டது; ஆகையால், அந்தக் கபட நாடகங்களை எல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்; உங்களுடைய அபாரமான புத்தி விசேஷத்தைப் பற்றி நான் நிரம்பவும் ஆச்சரியம் அடைந்து மெச்சினாலும், இந்த அற்பக் காரியத்தை உத்தேசித்து, நீங்கள் உங்களுடைய கண்ணியத்தையும், மேன்மையையும் இழந்து, மகா கேவலமான இந்த மார்க்கத்தை அனுசரித்ததே, எனக்கு சகிக்க முடியாத அவமானமாக இருக்கிறது; புலி பசித்தாலும் புல்லைத் தின்காது என்பார்கள், அதற்கு மாறாக நீங்கள் செய்திருக்கிறீர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/224&oldid=646040" இலிருந்து மீள்விக்கப்பட்டது