பக்கம்:மதன கல்யாணி-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221

உங்களுக்குப் பசித்தால் நீங்கள் குஷ்டரோகம் பிடித்த ஒரு மனிதனைக் கூடப் பிடித்துத் தின்று விடுவீர்கள் போலிருக்கிறது. நீங்கள் இப்படிப்பட்ட இழிவான காரியத்தில் இறங்கியதால், என் விஷயத்தில் எவ்விதப் பிழையும் செய்யாத ஒரு நிரபராதியின் உயிருக்கு அநியாயமாகத் தீம்பு செய்துவிட்டேன். அந்தப் பழி என்னைச் சேரவே சேராது; உங்களைத்தான் சேரும்; ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் மனசில் உறுதியாக இருக்கட்டும்; நான் சுத்த அசடனாகையால் ஏமாறிப் போய்விட்டேன் என்றும் கடைசி வரையில் என்னை ஏய்த்துவிட்டோம் என்றும் நீங்கள் நினைத்து மனப்பால் குடிக்க வேண்டாம். இந்த விஷயங்களை எல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களும் அறியும்படி செய்து, நான் பழிக்குப் பழி வாங்காமல் துங்குவேன் என்று நினைக்க வேண்டாம், இது சத்தியம்; முக்காலும் சத்தியம். ஆனால் கடைசியாக ஒரு விஷயம் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி, மதனகோபாலனுடைய விஷயத்தில் என்னைக் கொண்டு மிகவும் அநியாயமான காரியம் செய்வித்து, இப்போதும் என்னை வஞ்சித்து இழிவாகப் பேசியதற்கெல்லாம் ஆறுதலாக நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். நான் எல்லாவற்றையும் மறந்து உங்களுக்கு இனிமேலம் அந்தரங்க மான துணைவனாக இருந்து வருகிறேன். நான் கேட்பது இன்ன தென்பது தெரியவில்லையா? எனக்கும் உங்களிடத்தில் நெடுநாளாக ஓர் ஆசை இருந்து வருகிறது. நீங்கள் துரைஸானி போல வந்து, அந்த ஆசையை அதிகப்படுத்தில் ஒருவிதமான நம்பிக்கையையும் என் மனதில் உண்டாக்கி விட்டீர்கள்; ஆகையால் நீங்கள் எனக்குக் கொடுப்பதாகச் சொல்லிய சன்மானத்தைக் கொடுத்து விடுங்கள்; நாம் இருவரும் ஒத்துப் போய் விடுவோம்” என்று பயமுறுத்தியும் நயமாகவும் பேசினான்.

அவனது சொற்களைக் கேட்ட கல்யாணியம்மாளுக்கு ரெளத்தி ராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. அவளது உடம்பு பதை பதைத்தது; கண்கள் சிவந்து போயின. காமதகன காலத்தில் ஈசுவரன் நெற்றிக்கண்ணைத் திறந்தது போல அந்த அம்மாள் தனது விழிகளைத் திறந்து மகா கொடுரமான பார்வையாக அவனைப் பார்த்து, “நீ உடனே வெளியில் போகிறாயா? இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/225&oldid=646042" இலிருந்து மீள்விக்கப்பட்டது