பக்கம்:மதன கல்யாணி-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மதன கல்யாணி

விட்டால், உனக்குத் 5555 மரியாதை செய்தனுப்ப வேண்டுமா? என்ன சொல்லுகிறாய்? அந்த மீனாட்சியம்மாளுடைய முக தாட்சணியத்துக்காக நான் இந்நேரம் பொறுத்துக் கொண்டிருந் தேன். இனி மேல் உன்னுடைய வார்த்தை ஒன்றுகூட என் காதில் படக்கூடாது. போ வெளியே’ என்று அழுத்தமாக அதட்டிய குரலில் பேசவே, அவளது கொடுரப் பார்வையாலும் கடுர மொழியாலும் கலகலத்துப் போன துரைராஜா, “சரி, மயிலே மயிலே என்றால், அது இறகு போடாதென்பது சரியாகப் போய்விட்டது. நான் நயமாகக் கேட்டால், நீங்கள் வழிக்கு வரமாட்டீர்கள். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படுத்தி, சந்தி சிரிக்கும்படி செய்கிறேன். அப்படிச் செய்தால்தான், உங்களுக்கெல்லாம் புத்தி வரும். இருக்கட்டும் யாருடைய கை ஓங்குகிறதென்பதை வெகு சீக்கிரத்தில் காட்டுகிறேன்” என்று கூறிக்கொண்டே முறுக்காக வெளியிலே நடந்தான். அவ்வாறு அவ்விடத்தை விட்டு வெளிப்பட்ட துரைராஜா, மிகுந்த கோபத்தினால் பதைபதைத்தவனாய் தன்னை மறந்து பங்களாவிற்கு வெளியே சென்று, அங்கே நின்று கொண்டிருந்த லாரட்டில் ஏறி உட்கார்ந்து உடுப்பு மூட்டையை வாங்கி ஜாக்கிரதையாக மடியின் மீது வைத்துக் கொண்டு வண்டியைத் தனது பங்களாவிற்கு ஒட்டும்படி உத்தரவு கொடுக்க, அது அவ்வாறே செல்ல ஆரம்பித்தது. கேவலம் ஒரு விதவைப் பெண் பிள்ளை தன்னைக் கடைசி வரையில் ஏமாற்றி விட்டாளே என்ற நினைவும், ஆத்திரமும், கொதிப்புமே பொங்கி எழுந்து அவனது மனோமெய்களைத் தமது வசமாக்கிக் கொண்டன. தான் கல்யாணியம்மாளை எந்த விதத்தில் அவமானப்படுத்தித் தனது வஞ்சினத்தை முடித்துக் கொள்வது என்ற சிந்தனை இடை யிடையே தோன்றி, அவனது முழு நினைவையும் கொள்ளை கொண்டது. அந்த நிலைமையில், துரைராஜா, அன்றைய பகல் பன்னிரண்டு மணிக்குத் தனது பங்களாவை அடைந்தான். அடைந்தவன் ஸ்நானம் போஜனம் முதலிய எதையும் நாடாமல் நேராகத் தனது சயன அறையை அடைந்து கட்டிலின் மேல் படுத்துக் கொண்டான். அவ்வாறு அரைமணி நேரம் படுத்திருந்து தனது மனத்தில் எழுந்த உக்கிரமான கடுங்கோபத்தை அடக்க முயன்று கொண்டிருக்கையில், அன்றைய பகல் ஒரு மணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/226&oldid=646044" இலிருந்து மீள்விக்கப்பட்டது