பக்கம்:மதன கல்யாணி-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19

தன்னுடைய மனசாலும் இழிவாகவே நினைக்கவில்லை. இது மனித சுபாவம்; அன்னியப் பெண்பிள்ளைகள் தனியாக இருக்கும்படியான இடத்தில் நான் போனதனால், அந்த அம்மாள் இப்படிச் செய்யும்படியாக நேரிட்டது. அந்த அம்மாளுடைய கற்பு கெடுவதற்கு நான் அங்கே போனதே காரணம்; குற்றம் என்னுடையதுதான். இனி எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் தனக்குத் தானே கண்டித்துக் கொண்ட தன்றி இந்தச் சம்பவத்தை அவ்வளவோடு தன் மனசிலிருந்தும் விலக்கி விட்டான். அப்படி இருக்க, இந்த ஜெமீந்தாரிணியம்மாள் என்ன செய்தாள் என்றால், குதிரை கீழே தள்ளியதுமல்லாமல், புதைப்பதற்குக் குழியும் தோண்டியதென்கிறபடி, தான் அந்தப் பையன் விஷயத்தில் பெருத்த தவறு செய்ததுமன்றி, அவனே தன்னுடைய கையைப் பிடித்திழுத்தான் என்ற ஒரு கட்டுக்கதை யையும் வெளியிட்டு, அவன் இந்த ஊரில் வீணை கற்றுக் கொடுக்கப் போகும் ஒவ்வொரு பங்களாவுக்கும் போய், அவன் மேல் அபாண்டமான அவதுறைக் கற்பித்து, அவனை எல்லோரும் வேலையைவிட்டு நீக்கும்படி செய்திருக்கிறாள் என்றால் அந்தப் பையனுடைய மனம் எப்படித்தான் கொதிக்காது? இந்த அக்கிரமத்தைக் கேட்கும் மற்றவர்கள் தான் இதை எப்படி சகித்திருப்பார்கள்? நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கும் அந்தப் பையனைப் போலக் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களுடைய குழந்தையின் மேல் யாராவது இப்படிப்பட்ட அபாண்டமான பழி சுமத்தினால், உங்களுடைய வயிறு எப்படி எரியாது?” என்று கூறித் தமது கண்களைச் சிமிட்டிக் கொண்டு கல்யாணியம்மாளது முகத்தை உற்று நோக்கினார்.

அவரது கொடிய சொற்களும் கூரிய பார்வைகளும் கல்யாணி யம்மாள் சகிக்கக்கூடிய வரம்பைக் கடந்தவையாகப் போய் விட்டன. தான் அதுகாறும் அவருக்குப் பயந்து செம்மறி ஆடு போலக் கீழே குனிந்து நின்றதைப் பற்றி அவள் ஒருவாறு தன்னைத் தானே இகழ்ந்து கொண்டவளாய், தனது வீட்டிற்குள் எவனோ ஒர் அன்னியன் வந்து, தன்னை அவ்வளவு தூரம் அவமானப்படுத்தும்படி தான் இடங்கொடுத்ததைப் பற்றி தனக்குள் மிகவும் வருந்தியவளாய், எதுவரினும் வரட்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/23&oldid=646051" இலிருந்து மீள்விக்கப்பட்டது