பக்கம்:மதன கல்யாணி-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227

படுத்திக் கொண்டு, அதன் மூலமாக அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் மனதில் ஏற்பட்டு விட்டது. தனக்கு மைத்துனனாகப் போகும் மதனகோபாலனது விஷயத்தில் மிகுந்த அபிமானமும், இரக்கமும், வாத்சல்யமும், உருக்கமும் அப்போதே உண்டாகி விட்டன. இருந்தாலும், தனது மன நிலைமையை உடனே வெளியிடக் கூடாதென்ற ஓர் எண்ணம் உதிக்கவே, அவன் அதை விடுத்து வேறு விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்ற நினைவைக் கொண்டவனாய், அவரை நோக்கி, “அப்படியா அவர்கள் அநாதைகளா? ஐயோ பாவம்: இப்போது தாங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்க, என்னுடைய விசனம் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகுகிறது. என்னுடைய பெரிய தகப்பனார் இவர்களை அபிமானித்துக் காப்பாற்றி, எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார்கள்; அப்படிப்பட்ட இவர்களுக்கு நானும் என்னாலான உதவிகளைச் செய்வதைவிட்டு, இப்படிப் பட்ட பெருத்த துயரத்தையும் துன்பத்தையும் உண்டாக்கியது. தான் என்னுடைய நெஞ்சை அறுத்து, என் மனசைத் துளைக் கிறது. (சிறிது மெளனம்) உம். என்ன செய்கிறது அவனைச் சுட்டுப் போட்டுவிட்டு, இப்போது அழுவதால் அவனுடைய கஷ்டத்தில் கடுகளவாவது குறையப் போகிறதில்லை. அதிருக் கட்டும்; என்னுடைய பெரிய தகப்பனார் ஏதோ ஒரு கடிதம் கொடுத்தனுப்பி இருப்பதாகச் சொன்னர்களே! அதை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று அன்பாகவும் உரிமை பாராட்டியும் நயமாகவும் கேட்டான்.

உடனே பசவண்ண செட்டியார், “ஓ! கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கொடுப்பதற்காகத் தானே, நான் இந்தச் சந்திப்பை முக்கியமாக ஏற்படுத்திக் கொண்டது. அது இதோ இருக்கிறது கொடுக்கிறேன்” என்று கூறிய வண்ணம் தமது சட்ட்ையின் உட்புறத்துப் பைகள் ஒன்றனுள் கிடந்த ஒரு காகிதத்தை எடுத்து, அவனுக்கருகில் நீட்ட, அவன் அதை வணக்கமாக வாங்கி, அதன் உறையை நீக்கி உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு படித்தான். அது அடியில் வருமாறு எழுதப் பட்டிருந்தது: - -

கிருஷ்ணாபுரம் சின்ன ஜெமீந்தார் குமாரன் சிரஞ்சீவி துரைராஜா வுக்கு அநேக ஆசிர்வாதம். உபயக்ஷேமம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/231&oldid=646054" இலிருந்து மீள்விக்கப்பட்டது