பக்கம்:மதன கல்யாணி-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மதன கல்யாணி

இந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறவரான ம-ா-ா-பூதி பசவண்ண செட்டியார் அவர்கள், நான் இந்த ஊரில் பல வருவடிங் களாகச் செய்து வரும் சந்தனக்கட்டை வியாபாரத்தில், என்னோடு கூட்டாளியாக இருந்து வியாபாரம் செய்து வருபவர்கள். இவர்கள் தக்க பிரபுத்துவமும், கண்ணியமும் வாய்ந்த பெருத்த தனிகர். இந்த மைசூரிலுள்ள பணக்காரர்களை எல்லாம் எல்லா அம்சத்திலும் இவர்களுக்கு அடுத்தபடியாகத் தான் மதிக்க வேண்டும். இவர்கள் மனைவி மக்கள் முதலிய தொல்லைகள் இல்லாமல் இருப்பதால், தமது வாசஸ்தலத்தை மாற்றிக் கொண்டு சென்னையில் ஒரு முதலாளி இருப்பது அவசியமாக இருப்பதாலும், இவர்கள் அங்கே வருகிறார்கள். இவர்களுக்கு சென்னையில் அறிமுகமான வர்கள் வேறே எவரும் இல்லை. ஆகையால் இவர்களுக்கு என்னென்ன செளகரியங்கள் தேவையோ, அவைகளை எல்லாம் நீ செய்து கொடுத்து, இவர்களைத் தக்கபடி உபசரிப்பாய் என்று நான் நம்புகிறேன்.

நிற்க, உங்களுடைய கூேடிம சமாசாரங்களை அடிக்கடி எழுதும் படி நான் எத்தனை முறையோ எழுதி இருந்தும், உங்களுடைய கடிதம் கிடைப்பது அத்தி பூப்பது போல இருக்கிறது. மீனாr யம்மாளுடைய செளக்கியத்தையும் செளபாக்கியவதி கண்மணி யம்மாளுடைய செளக்கியத்தையும் உன்னுடைய செளக்கியத் தையும் அறிந்து கொள்ள ஆவலுள்ளவனாக இருக்கிறேன்.

இது நிற்க, செளபாக்கியவதி கண்மணியம்மாளை, மாரமங்கலம் மைனருக்குக் கட்டிக்கொடுக்க நிச்சயம் ஆகியிருக்கிறதென்றும், அதற்கு நிச்சயதார்த்த முகூர்த்தம்கூட நிருணயிக்கப்பட்டிருக்கிற தென்றும், நான் ஒரு நண்பருடைய கடிதத்தின் மூலமாக அறிந்து கொண்டேன். அந்தச் சம்பந்தம் செய்து கொள்வதில் குழந்தைக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை என்பதையும், அந்தக் கடிதத்தினால் நான் அறிந்து கொண்டேன் மீனாகூஜியம்மாள் மற்ற எந்த விஷயத் தில் என்னுடைய அபிப்பிராயத்தைக் கலந்து கொள்ளாவிட் டாலும், அதைப்பற்றி எனக்கு அவ்வளவு விசனம் உண்டாகாது. இந்த ஒரு விஷயம் மாத்திரம் எனக்கு மகா முக்கியமானது. ஆகை யால் இந்த விஷயத்தில் என்னுடைய சம்மதியையும் பெற்றுக் கொண்டு ஒரு முடிவைச் செய்ய வேண்டும் என்று நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/232&oldid=646056" இலிருந்து மீள்விக்கப்பட்டது