பக்கம்:மதன கல்யாணி-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229

தெரிவித்ததாக, நீ உடனே உன் அத்தையம்மாளிடத்தில் சொல்ல வேண்டும். அவர்கள் மற்ற எந்த விஷயத்தில் என்னுடைய பிரியத்தை அனுசரித்து நடக்காவிட்டாலும் இதில் மாத்திரம் அவர்கள் என்னை ஒரு மனிதனாக மதிப்பார்கள் என்று உறுதியாக நம்பியிருக்கிறேன். இனி எனக்கு நீங்கள் எழுதும் கடிதங்களை எல்லாம், இந்தக் கடிதம் கொண்டு என்னுடைய கூட்டாளி யான செட்டியார் அவர்களிடத்தில் கொடுத்து விட்டால், இவர்கள் தினந்தினம் எனக்கனுப்பும் தபாலோடு சேர்த்து அனுப்பி விடுவார்கள்.

மற்ற விஷயங்களை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். அடிக்கடி கூேடிமத்தை எழுதித் தெரிவிக்கவும். *

அநேக ஆசீர்வாதம், சோமசுந்தர-துரை, கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார்.

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த துரைராஜா மிகுந்த களிப்படைந்தவனாய், பசவண்ண செட்டியாரை நோக்கி, “உங்களைப் பற்றி என்னுடைய பெரிய தகப்பனார் எழுதியிருப் பதைப் பார்க்க, நான், நீங்கள் இறங்கியிருக்கும் ஜாகைக்கு வந்து உங்களுடைய சமுகம் பார்த்து நடக்க வேண்டியவனாக இருக்கி றேன். அப்படி இருக்க, நான் இவ்வளவு தூரம் பெரிய மனுஷத் தனம் வகித்து, நீங்களே என்னைப் பார்க்க வரும்படியாகச் செய்தது பெருத்த அபசாரமான காரியம் என்று நினைக்கிறேன்” என்று மிகுந்த மரியாதையோடு கூறினான். அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் அவனுக்கு அன்னியோன்னியமான நண்பர் ஆகிவிட்டவர் போல, ஒருவித உரிமையும் நட்பும் அன்பும் தோற்றுவித்து, “அடாடா ஏதேது: நீங்கள் என்னைப் பிரமாதமாக மதித்து மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டீர்களே! என்னிடத்தில் இரண்டு காசு அதிகமாக இருக்கலாம். அதனால், நான் வீண்கருவம் பாராட்டி மற்றவரை எல்லாம், நமக்குக் கீழான வர்கள் என்று நினைத்து, வீட்டில் திண்டிலேயே சாய்ந்து கொண்டிருகிறவனல்ல. உங்களைப் போன்ற சிறு பிள்ளைகளோ டெல்லாம் சேர்ந்து கொண்டு நானும் ஒரு சிறுபிள்ளை போல ஒடி யாடித் திரிந்து பணத்தை வாரி இறைத்து சுகங்களை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/233&oldid=646058" இலிருந்து மீள்விக்கப்பட்டது