பக்கம்:மதன கல்யாணி-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233

- என்று தனது தங்கையால் எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த துரைராஜாவின் முகம் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் காண்பித்தது. அவன் உடனே செட்டியாரை நோக்கி, “இந்தக் கடிதத்திலிருந்து முக்கியமான இரண்டு விஷயங்கள் நிச்சயமாகத் தெரிகின்றன. முதலாவது விஷயம் என்னவென்றால், மதனகோ பாலன் எப்படிப்பட்ட கெட்ட காரியத்தின் பொருட்டும் சந்திக்கவில்லை என்பது. இரண்டாவது என்னவென்றால், மதனகோ பாலன் எப்படிப்பட்ட கெட்ட காரியத்தைச் செய்யவும் இணங்காத மகா பரிசுத்தமான மனிதன் என்பது. ஆனால் இதில் குறிக்கப்பட்டிருக்கும் முக்கியமான விஷயந்தான் இன்னதென்பது தெரியவில்லை, அதிக அவசரமும் விபரீதமுமான ஒரு விஷயத்தைப் பற்றி அவனிடத்தில் பேச விரும்பியதாக இவள் எழுதி இருக்கிறாள்; அவன் வராவிட்டால் அன்றிரவே இறந்து போய்விட உத்தேசித் திருப்பதாகவும் எழுதியிருக்கிறாள். அந்தச் சங்கதிதான் விளங்க வில்லை” என்றான். செட்டியார், “மதன கோபாலனுக்கு இந்தக் கடிதம் வந்தவுடனே, அவன் இதை என்னிடத்தில் கொடுத்ததன்றி, அன்னியருடைய தோட்டத்துக்குள் ராக்காலத்தில் தான் போய் ஒரு யெளவனப் பெண்ணினிடத்தில் சம்பாஷிப்பது தவறென்றும், அதை எவரேனும் காண்பாரானால் அந்தப் பெண்ணின் கற்பைப் பற்றி அவர் சந்தேகிக்கவும், அதனால் அவளுக்குத் துன்பம் நேரவும் கூடுமென்றும், ஆகையால் தான் போகவில்லை என்றும் முடிவாகச் சொல்லி விட்டான். அவன் வராவிட்டால் இறந்து போய்விடுவதாகச் சொல்லுகிறாளே என்பதைக் கருதி, அதைத் தடுக்கும் பொருட்டு, நானே அவனை அனுப்பி வைத்தேன்; அவன் சற்றுமுன் கண் விழித்துப் பார்த்த போது என்னிடத்தில் இரண்டொரு வார்த்தைகள் சொன்னான். அன்றைய தினம் ராத்திரி உங்கள் தங்கைக்கும் மாரமங்கலம் மைனருக்கும் நிச்சயதார்த்தம் குறிப்பிட்டிருந்ததாகவும், மைனரைக் கலியாணம் செய்து கொள்ளத் தனக்குப் பிரியமில்லை என்றும், தான் எவ்வளவு தூரம் நியாயம் சொல்லியும் அத்தையம்மாள் ஒரே பிடிவாதமாக இருந்ததாகவும், ஆகையால் அவர்களுக்கு விரோதமாகப் பேசுவதைவிட, அன்றிரவு தான் வெளிப்படும் முன், மேன்மாடியிலிருந்து கீழே விழுந்து தன்னுடைய உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருந்ததாகவும் உங்களுடைய தங்கை சொன்னாளாம். ஆனால், மதனகோபாலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/237&oldid=646065" இலிருந்து மீள்விக்கப்பட்டது