பக்கம்:மதன கல்யாணி-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235

பங்களவை விட்டு அனுப்பியது முதல் அவன் அதனால் பெருத்த விசனத்தில் மூழ்கி மெய்ம்மறந்து கல்யாணியம்மாளது அந்தப் புரத்திற்குள் நுழைந்ததும், பிறகு அங்கே கல்யாணியம்மாள் செய்த காரியங்களும், அவன் தப்பியோடியதும் ஆகிய சகலமான விவரங்களையும் தெரிவித்தார்.

அந்த வரலாற்றைக் கேட்ட துரைராஜா, மதனகோபாலனது விஷயத்தில் மிகுந்த இரக்கமும் விசனமும் கொண்டதன்றி, கல்யாணியம்மாளின் மீது அளவிலடங்காத அருவருப்பும் கொதிப்பும் அடைந்தவனாய் செட்டியாரை நோக்கி, “இந்த விஷயத்தை நினைக்க நினைக்க, என் மனம் பதறுகிறது. கல்யாணியம்மாள், தானே இவன் விஷயத்தில் தவறாக நடந்து விட்டு, முன் ஜாக்கிரதையின் பொருட்டு அதை வேறாக மாற்றி, எல்லா இடங்களுக்கும் போய் இவனுடைய உத்தியோகத்தை எல்லாம் போக்கி, பெயரையும் கெடுத்ததோடு நிற்காமல், இன்னமும் ஒர் அபாரமான காரியத்தையும் செய்திருக்கிறாள். அதை நான் சொன்னால், நீங்கள் உண்மை என்று நம்பவே மாட்டீர்கள். அந்த விஷயத்தில் அவள் என்னையும் மயக்கி முட்டாளாக்கி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்டிருக் கிறாள். இப்போது மதனகோபாலன் சுடப்பட்டதற்கும் அவளே மூலகாரணமான மனிஷி. அவளுடைய மோக வலையில் வீழ்ந்த நான் இந்தக் காரியத்தைச் செய்து விட்டேன். இதோ இருக்கும் இந்த மூன்று கடிதங்களையும், நீங்கள் படித்துப்பார்த்தால், எல்லா விஷயங்களும் தெளிவாக உங்களுக்கு விளங்கிப்போம்” என்று கூறிய வண்ணம், துரையம்மாள் என்ற கையெழுத்தோடு தனக்கு வந்த இரண்டு கடிதங்களையும் கொடுத்து, தான் பார்க் உத்தியான வனத்தில் வெள்ளைக்கார உடையில் வந்த ஸ்திரீயைச் சந்தித்த போது நடந்த சம்பாஷணையின் விவரத்தையும் வெளியிட்டு காகித மூட்டைக்குள்ளே இருந்த உடைகளையும் அவருக்குக் காட்டினான். அன்றைய தினம் காலையில் மைனரது கடிதமும் முட்டையும் கிடைத்த பிறகு தான் ரென் பென்னெட் கம்பெனிக்குப் போய் அங்கே இருந்து கல்யாணியம்மாளிடம் போனதையும், அங்கே நடந்த சம்பாஷைணையின் விவரங்களை யும் விரித்துக் கூறினான். பசவண்ண செட்டியார் அந்த மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/239&oldid=646069" இலிருந்து மீள்விக்கப்பட்டது