பக்கம்:மதன கல்யாணி-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மதன கல்யாணி

ஒரு வகையான மூர்க்க குணத்தைக் கொண்டு, மிகுந்த கோபத் தோடு நிமிர்ந்து அவரைப் பார்த்து, “ஒய் செட்டியாரே! நீர் அந்தக் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு வந்ததை உத்தேசித்து, உம்மை அவமரியாதைப் படுத்தக்கூடா தென்று நான் இதுவரையில் தாட்சணியம் பார்த்தேன். நீர் மகா சாமர்த்தியமாகப் பேசுவதாகப் பிதற்ற ஆரம்பித்து விட்டீரே. நான் என்ன தெருவில் திரியும் தாசியென்று நினைத்து இவ்வளவு தூரம் பேசுகிறீரா? இந்த வார்த்தைகளைக் கேட்க ஆச்சரியமும், திகைப்பும் இதுவரையில் என்னுடைய வாயைத் திறக்க முடியாமல் அடைத்துவிட்டன. அந்த மதனகோபாலன் இங்கே செய்ததைப் பற்றி, நான் அவன் விஷயத்தில் ஏதாவது கடுமையான காரியங்களைச் செய்துவிடப் போகிறேன் என்ற முன் ஜாக்கிரதையினால், நீர் உண்மையை இப்படி மாற்றி, பழியை எல்லாம் என் மேல் போட வந்தீர் போலிருக்கிறது. இப்படிப்பட்ட சதிகார மனிதனோடு இனிமேல் ஒரு நிமிஷமும் பேசிக் கொண்டிருக்க எனக்கு மனமில்லை. நீர் எழுந்து போகலாம். என்னை யார் என்று எண்ணிக் கொண்டீர்? அவதுறு பேசும் நாக்கை அறுத்துவிடச் சொல்லுவேன். மரியாதையாக எழுந்து வெளியில் நடவும்” என்று கூறினாள். மிகுந்த கோபத்தினால் முகம் கருத்து, இரத்தம் தெறிக்கும் நிலைமையை அடைந்தது. கண்கள் கோவைப்பழங்களாகச் சிவந்து தீப்பொறிகள் சிந்தின; தேகம் பதைத்துப் பறந்தது. -

அவளது சொற்களைக் கேட்ட அந்தக் கிழவர் தமது கைத்தடியை எடுத்துக் கொண்டு மிகவும் அலட்சியமாகவும் அமர்த்தலாகவும் தமது ஆசனத்தை விட்டெழுந்து, “அப்படியே ஆகட்டும் அம்மணி நான் வந்தும் அதிக நேரமாகிவிட்ட தாகையால், நீங்கள் சொல்லாவிட்டாலும் நானே போக வேண்டியவன்; எனக்கும் இதைப் போல பங்களாவும், சோபா, நாற்காலி முதலிய வசதிகளும் இருக்கின்றன; ஆகையால், நான் இங்கே அநாவசியமாக உட்கார்ந்திருப்பதற்காக வரவில்லை; நாம் பெரிய சமஸ்தானத்தின் ஜெமீந்தாரிணியாயிற்றே. இவன் கேவலம் வாத்தியம் வாசிக்கிற ஒர் ஏழைப் பையன்தானே. இவன் நம்மை என்ன செய்யக் கிடக்கிறது. பணத்தை வாரி இறைத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/24&oldid=646070" இலிருந்து மீள்விக்கப்பட்டது