பக்கம்:மதன கல்யாணி-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237

முதலாவது கடிதம் உங்களுக்குக் கிடைத்ததையும், அதன்படி உத்தியான வனத்தில் வந்து சந்தித்த அந்த ஸ்திரீக்கும் உங்களுக்கும் நடந்த சம்பாஷணையின் விவரத்தையும், மறுபடியும் கிடைத்த கடிதத்தின் சங்கதியையும், இன்று மைனரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரத்தையும், ரென் பென்னெட் கம்பெனியில் கிடைத்த செய்தியையும் எழுதி நீங்கள் அந்த ஸ்திரீயின் மோகவலையிற்பட்டு அவளுடைய வார்த்தைகளை நம்பி, அவனைச் சுட்டுவிட்டபடியால் அதைப்பற்றி இப்போது நிரம்பவும் விசனப்பட்டு வருந்துவதாகவும் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் எழுதி என்னிடத்தில் கொடுங்கள். அதோடு இந்த மூன்று கடிதங்களையும், வெள்ளைக்கார உடைகளடங்கிய இந்த மூட்டையையும் என்னிடத்தில் கொடுங்கள். அதற்கு மேல் ஆகவேண்டிய விஷயங்களை எல்லாம் நான் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்றார்.

துரைராஜா மிகுந்த சந்தோஷத்தோடு அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டு, உடனே மேஜைக்கருகில் போய் உட்கார்ந்து கொண்டு, அவர் சொல்லியபடி மதனகோபாலனுக்கு ஒரு கடிதமெழுதி உறைக்குள் போட்டு, அதையும் மற்ற மூன்று கடிதங்களையும், துணி மூட்டையையும் எடுத்து செட்டியாரிடத் தில் கொடுக்க, அவரும் மகிழ்ச்சியோடு அவைகளை வாங்கி, கடிதங்களை சட்டைப் பைக்குள்ளும், மூட்டையை பக்கத்திலும் வைத்துக் கொண்டவராய், “நான் இப்போது இங்கே வந்ததனால் எவ்வளவு பெருத்த அனுகூலம் ஏற்பட்டது பார்த்தீர்களா இந்த ஆதாரங்களே போதுமானவை. இவைகளை வைத்துக் கொண்டு நான் அந்தக் கல்யாணியம்மாளைக் கதற அடித்து, மதன கோபாலனுடைய காலிலும், உங்களுடைய காலிலும் வந்து விழுந்து கெஞ்சி மன்றாடும்படி செய்துவிடுகிறேன். நாளைய தினம் அவள் என்ன பாடுபடப் போகிறாள் பாருங்கள். (சிறிது நேரம் மெளனம்) சரி; இந்தச் சங்கதியை இவ்வளவோடு நிறுத்துவோம். நான் வந்த போது இந்தச் சங்கதியைப் பற்றி இவ்வளவு நேரம் பேசுவோம் என்ற நான் எண்ணவே இல்லை. இந்த ஒரு விஷயம் ஒருமணி நேரம் இழுத்து விட்டது. நீங்கள் இன்று மூன்று மணிக்கு யாரோ சில அருமையான நண்பர் களுடைய ஜாகைக்குப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/241&oldid=646074" இலிருந்து மீள்விக்கப்பட்டது