பக்கம்:மதன கல்யாணி-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மதன கல்யாணி

வேண்டும் என்று சொன்னிகள், அதற்கும் நேரம் நெருங்குகிறது. இன்னமும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி, நாம் விஸ்தாரமாகப் பேச வேண்டும். உங்களுடைய பிரியமான நண்பர்களை எல்லாம் நானும் பார்த்து அவர்களோடு சிநேகம் செய்து கொள்ள வேண்டும். எனக்கு நீங்கள் அந்த மைனரையும் பாலாம்பாளையும் சிநேகம் செய்துவைக்க வேண்டும். நாம் எல்லோரும், நாடகம், பயாஸ் கோப் முதலியவைகளுக்கும், மற்ற சகலமான வேடிக்கை களுக்கும் போய் சந்தோஷமாகப் பொழுதைப் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களுடைய பெரிய தகப்பனார் சொற்பமான பணத்தொகையையே அனுப்புவதாக அவர் இரண்டொரு சந்தர்ப்பங்களில் சொல்ல நான் கேள்விப்பட்டிருக் கிறேன். அதனால் நீங்கள் தாராளமாகப் பணச் செலவு செய்ய முடியாமல் இருக்கலாம். இனிமேல் என்னுடைய பணம் எல்லாம் உங்களுடையது. பதினாயிரமல்ல, லட்சமல்ல, எவ்வளவு தொகையானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

அதைக் கேட்டு பரம சந்தோஷமடைந்து மெய்ம்மறந்து போன துரைராஜா சடக்கென்று எழுந்து, அந்த அறையின் வாசற்படிக்குப் போய் தலையை அப்பால் நீட்டி அங்கே இருந்த வேலைக்காரர் களுக்கு ஏதோ சைகை காட்டிவிட்டு, திரும்பவும் உள்ளே வந்து, அங்கே கிடந்த சில நாற்காலிகளை இழுத்து அங்குமிங்கும் வைக்கத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் நாலைந்து வேலைக் காரர்கள் சிற்றுண்டிகள், காப்பி, கலர், சோடா, பழவகைகள், தாம்பூலாதிகள் முதலியவற்றை நாலைந்து தட்டுகளில் வைத்து மரியாதையாக எடுத்து வந்து ஒரு பெருத்த மேஜையின் மேல் வைத்து விட்டுப் போக, அதைக் கண்ட செட்டியார் ஒருவாறு கிலேசமடைந்து, “இதென்ன இது? யாருக்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன? நான் சாப்பாட்டு ராமன் என்பதை நீங்கள் எப்படியோ அறிந்து கொண்டிருக்கிறீர்களே!” என்று பரிகாசமாகப் பேச, அதைக் கேட்டதுரைராஜா, “நீங்கள் பகல் போஜனம் செய்து அதிகநேரம் ஆகியிருக்கலாம். கோமளேசுவரன் பேட்டையி லிருந்து இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து அலுத்துப் போயிருக்கிறீர்கள். எழுந்து வாருங்கள்” என்று அன்பாகவும் நயமாகவும் உபசரிக்க, செட்டியார் அதிகமாகப் பிணங்காமல், “சரி, காத்துக் கொண் டிருக்கிறேன். ஒரு வயிற்றுச் சோறு அகப்படாதா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/242&oldid=646076" இலிருந்து மீள்விக்கப்பட்டது