பக்கம்:மதன கல்யாணி-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#4&

242 மதன கல்யாணி

அருவருப்பையும், பகைமையையும் கொள்வார். எனக்கும் அவர்களுக்கும் கூட இந்த விஷயத்தினாலே, கொஞ்சம் மனஸ் தாபம்கூட உண்டு. அவர்கள் மகா சுத்தமான மனிதர். அன்னிய ஸ்திரிகளைத் தனது சொந்தத் தாய்மார்களாகவும், தங்கை தமக்கைகளாகவும் மதிக்கிறவர்கள். நானோ உங்களைச் சேர்ந்தவன். நல்ல அழகான பெண்களெல்லாம் நமக்காகத்தான் பிறந்தவர்கள் என்று நீங்கள் எப்படி எண்ணி இருக்கிறீர்களோ அதைப் போலவே அதைப் போலவே நானும் எண்ணுகிறவன். இது அவர்களுக்குப் பிடிக்கிறதில்லை; அவர்கள் என்னை அடிக்கடி கண்டிப்பது வழக்கம். ஆகவே, நான் அவர்களுடைய உபத்திரவம் இல்லாமல் இங்கே வந்து இருந்துவிட உத்தேசித்து விட்டேன். அதிருக்கட்டும்; எனக்கு இன்னொரு சந்தேகம் உண்டாகிறது; எனக்கு இந்த விஷயத்தில் இருக்கும் ஆசையோ ஆகாயத்தை அளாவியதாக அவ்வளவு அபரிமிதமாக இருக்கிறது. ஆனால், உடம்பிலோ வல்லமை இல்லாமல் இருக்கிறது; நானும் உங்களுக்கு மேல் கட்டுமஸ்தான உடம்போடு தானிருந்தேன். அந்தக் காலத்தில்கூட, இரண்டு மூன்று ஸ்திரிகளிடத்தில் கூட நட்டாக இருக்க முடியவில்லையே; நீங்கள் இந்த ஆயிரம் கோபிகா ஸ்திரிகளையும் எப்படித் திருப்தி செய்து நீங்களும் சந்தோஷம் அடைகிறீர்கள்? அதுதான் எனக்கு அதியற்புதமாகத் தோன்றுகிறது:

துரைராஜா:- அந்த விஷயம் உண்மையானதுதான். நானும் ஆரம்பத்தில் அந்தத் துன்பத்தினால் எவ்வளவோ உபத்திரவங்க ளுக்கும் அவமானத்துக்கும் ஆளானேன். கடைசியாக ஒரு தாசியின் போதனையால், நான் சீமையிலிருந்து வரும் மாமிசங் களையும், ஒயின், பிராந்தி, விஸ்கி முதலிய வஸ்துக்களையும் உபயோகிக்கத் தொடங்கினேன்; அதன் பிறகு அவ்வளவு சிரமம் தோன்றவில்லை.

செட்டியார்: ஓகோ அப்படியா! அந்த வழியை இது வரையில் எனக்கு ஒருவரும் சொல்லவில்லை. நானும் இனிமேல், அந்த முறையைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். இன்னொரு விஷயம்; சீமைச் சரக்குகளை எல்லாம் நீங்கள் இங்கேயே வரவழைக்கிறது வழக்கமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/246&oldid=646083" இலிருந்து மீள்விக்கப்பட்டது