பக்கம்:மதன கல்யாணி-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மதன கல்யாணி

கொண்டு, மேன்மாடியை விட்டுக் கீழே இறங்க, அங்கே ஆயத்தமாக நின்று கொண்டிருந்த ஸ்ாரட்டில் பசவன்ன செட்டியார் உட்கார்ந்து மறுபடியும் துரைராஜாவினிடத்தில் விடை பெற்றுக் கொள்ள, உடனே வண்டி புறப்பட்டது.

அது சிறிது தூரம் போனவுடனே செட்டியார் சாரதியை நோக்கி, வண்டியை மைலாப்பூரில் உள்ள வக்கில் அருணகிரிப்பிள்ளை யின் வீட்டிற்கு ஒட்டும்படி உத்தரவு செய்ய, அவன் அவ்வாறே ஒட்டலானான். துரைராஜாவின் பெரிய தகப்பனாரான கிருஷ்ணா புரம் ஜெமீந்தாரே பசவண்ண செட்டியார் என்ற பெயரை வகித்துக் கொண்டு வந்திருப்பதாக முன்னரே சொல்லப்பட்ட தல்லவா, அவர், இறந்து போன தமது தம்பியின் புத்திரனும் தமக்கு வார்சுதார்னுமான துரைராஜாவைப் பற்றிய பல தடவைகளில் பலர் மூலமாகக் கெட்ட செய்திகளை எல்லாம் கேள்வியுற்றிருந் தார். ஆனாலும் அவைகளை நம்பாமல் நேராகவே வந்து அவனோடு அன்னியோன்னியமாகப் பழகி, அவனது உண்மை யான யோக்கியதை எவ்வளவு என்பதைத் தாமாகவே அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆகவே, அவர் அவனோடு சம்பாஷித்திருந்த போது அவனது மனப்போக்குக் கிசைய, வார்த்தைகளை எல்லாம் உபயோகித்து, உண்மையில் அவன் எப்படிப்பட்ட நடத்தை உள்ளவன் என்பதை அதிக சுலபத்தில் கண்டு கொண்டார். அவரது மனதை முழுதும் தான் கவர்ந்து அவரை சந்தோஷக் கடலில் ஆழ்த்திவிட்டதாக, துரைராஜா நினைத்து இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தான் ஆனாலும், செட்டியாரோ அவனை விட்டுப் பிரிந்த பிறகு மிகுந்த விசனத்தில் ஆழ்ந்து, எவ்வளவோ பாடுபட்டுத் தேடிய அபாரமான தமது செல்வம் எல்லாம், அப்படிப்பட்ட அயோக்கிய சிகாமணிக்கா போய்ச் சேருவது என்ற நினைவினாலும் கவலையினாலும் துயருற்றுத் தளர்வடைந்தவராகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த ஸாரட்டு வண்டி அருணகிரிப் பிள்ளையின் வீட்டு வாசலில் போய் நின்றது. பசவண்ண செட்டியார் உடனே கீழே இறங்கி, உள்ளே போய் வக்கீலைக் கண்டு, அவரிடத்தில் நெடு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்த பின்னர், அந்த வக்கீல் மாரமங்கலம் ஜெமீந்தாரினியான கல்யாணியம்மாளுக்கு ஒரு நோட்டீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/250&oldid=646093" இலிருந்து மீள்விக்கப்பட்டது