பக்கம்:மதன கல்யாணி-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மதன கல்யாணி

அச்சமும் கொண்டு, “நான் போயி அவளெ இட்டாந்தது ஒருத்தருக்குந் தெரியாதுங்களே. அவ ராத்திரி நேரத்துலே வந்தா, நாம்ப தனியா இருந்து பேசினோம். அதுக்குப் பொறவாலே அவ ஒருத்தருக்குந் தெரியாமே பதுங்கி ஓடிப்புட்டா. சங்கதி காதுங் காதும் வச்சாப்பலே நடந்திருக்குது. இத்தெ யாரு பார்த்திருப் பாங்க! ஏன் என்னா நடந்திச்சு?” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “நீ ஒரு பெரிய பைத்தியக் காரி, உனக்குக் கண்ணும் தெரியாது மண்ணும் தெரியாது. ஒருவரும் பார்க்கவில்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கி றாய்; சங்கதி பெருத்த விபரீதமாக முடிந்து விட்டது. நீ காலையில் ஆலந்துருக்குப் போனது, இரவில் நீயும் அவளும் வந்தது, நாம் மூவரும் தனியாகப் பேசிய சங்கதிகள் ஆகிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் இன்று காலையில் யாரோ இந்த பங்களா விலிருந்து போய் மைனருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அவன் அந்த விவரங்களை எல்லாம் மைனருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அவன் அந்த விவரங்களை எல்லாம் கண்டு ஒரு கடிதம் எழுதி துரைராஜாவுக்கு அனுப்பியிருக்கிறான். துரைராஜா கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கே வந்து அந்தக் கடிதத்தை என்னிடத்தில் காட்ட, நான் அதை என்னுடைய கண்ணால் பார்த்தேன். அப்படி இருக்க சங்கதி அவனுக்கு எட்டிவிட்டதென்பதைப் பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை; ஆனால் யார் இங்கே இருந்து போய் இதை எல்லாம் தெரிவித்திருப்பார்கள் என்பது தான் தெரிய வேண்டும். ஒரு வேளை துரைஸானியம்மாள் செய்தி சொல்லி அனுப்பியிருப்பாளோ என்று சந்தேகிக்கவும் இடமில்லை. அவள் நேற்று முழுதும் தலைவலியினால் சங்கடப்பட்டுக் கொண்டு தன்னுடைய விடுதியை விட்டு வெளியில் வராமலே படுத்திருந் தாள். அவளைத் தவிர, மற்ற எவரும் எனக்கு விரோத மாக நடக்கக் கூடியவர்களல்ல. இது தான் பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது” எனறாள.

பொன்னம்மாள், “நேத்து ஒங்களோடெ இருக்க வேண்டிய மொறெ சின்னம்மாறும். நாம்ப பேசற போது அவகூட இல்லியே! சங்கதி எப்பிடி வெளியாச்சு! இது அதிசயமா இருக்குதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/254&oldid=646100" இலிருந்து மீள்விக்கப்பட்டது