பக்கம்:மதன கல்யாணி-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25;

என்னமோ போங்க யாரு சொன்னாவளோ அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியணும். நான் எவருக்கிட்டவும் மூச்சுப் பேச்சு உடல்லே” என்றாள்.

உடனே கல்யாணியம்மாள், “சரி; யார் சொன்னது என்பதைப் பற்றி நாம் இப்போது விசாரணை செய்து கொண்டிருப்பது சரியல்ல. அதைப் பின்னால் வைத்துக் கொள்வோம். இப்போது மேலே நடக்க வேண்டிய விஷயங்களையே நாம் உடனே கவனிக்க வேண்டும். கட்டையன் குறவன் வந்தாலும் சரி; ஈசுவரன் வந்தாலும் சரி, பத்திரத்தை அபகரித்துக் கொண்டுவர முடியாமல், தான் செய்யப் போவதாக மைனர் துரைராஜாவுக்கு எழுதி இருக்கிறான். அவன் பத்திரத்தை அந்த பங்களாவில் வைக்காமல், வேறே யாரிடத்திலாவது கொடுத்து வைப்பான் போலிருக்கிறது; ஆகையால் கட்டையன் குறவன் போவதில் உபயோகமில்லை. இதனால் மைனருக்கு நம்மேல் வீண் ஆத்திரம் உண்டாவது தான் மிஞ்சும். அதுவும் தவிர கட்டையன் குறவன் குடிவெறியோடு போவான். பத்திரம் அகப்படவில்லை என்கிற மூர்க்கத்தில் மைனரை அடித்துப் போட்டாலும் போட்டு விடுவான்; அது காசைக் கொடுத்துத் தேளைக் கொட்ட விட்டுக் கொள்வது போல முடியும்; ஆகையால் ஒரு காரியம் செய். நேற்று மாதிரி, நீ இங்கே இருந்து உடனே புறப்பட்டு ஒரு குதிரை வண்டியில் ஆலந்துருக்குப் போய்க் கருப்பாயியைக் கண்டு, விஷயம் வெளி யாகிவிட்ட சங்கதியையும், அவர்கள் எப்படி முயற்சி செய்தாலும், இன்று பத்திரம் அகப்படாதென்றும் சொல்லி, இன்று சும்மா இருந்து விடும்படி அவர்களிடத்தில் சொல்லிவிட்டு வா” என்றாள்.

பொன்னம்மாள் சிறிது தயங்கி, “அப்படியே ஆவட்டம் நான் போறேனுங்க, அவுங்க ரெண்டு பேரும் கெட்ட நாயிங்க நாம்ப குடுக்கறோமுன்னு சொன்ன பாக்கிப் பணத்தெக் கொண்டாந்து களட்டு இன்னு கேட்டாலும் கேப்பாங்க; அதுக்கு என்ன செய்யறதுங்க” என்றாள்.

கல்யாணியம்மாள் சிறிது யோசனை செய்தபின், “சரி; தொலைகிற வாய்முட்டெல்லாம் தொலையட்டும்; அவர்கள் அங்கே போய் வீண் கலகம் செய்து, நமக்கு உபத்திரவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/255&oldid=646101" இலிருந்து மீள்விக்கப்பட்டது