பக்கம்:மதன கல்யாணி-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மதன கல்யாணி

செய்விப்பதைவிட சும்மா இருப்பதே போதுமானது; நாம் சொன்னபடி மிகுதிப் பணத்தையும் அவன் இங்கே வந்து வாங்கிக் கொண்டு போகட்டும்; பிறகு பத்திரம் எங்கே இருக்கிற தென்பது தெரிந்தால், அப்போது அவர்களை ஏவி, அந்தக் காரியத்தை முடித்துக் கொள்வோம்; நீ உடனே போ! தாமசம் பண்ண வேண்டாம்” என்று கூறிய வண்ணம் எழுந்து பெட்டியைத் திறந்து, வண்டிச் செலவிற்குப் பணம் எடுத்துக் கொடுக்க, பொன்னம்மாள் அதை வாங்கிக் கொண்டு வெளியிலே போய் விட்டாள். உடனே கல்யாணியம்மாள் தனது அந்தப்புரத்தின் கதவுகளை எல்லாம் தாளிட்டுக் கொண்டு, கட்டிலின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டாள்; அவளது உடம்பு நடுக்குஜாரம் கொண்டது போல சகிக்க இயலாத வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந் தது; மனதோ சல்லடைக் கண்கள் போலத் துளைபட்டு விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. தான் ஒரு துன்பத்தை விலக்குவதற்கு முயற்சித்தால், அதன் பின்னால் ஒன்பது துன்பங்கள் முளைக்கின்றனவே என்ற கவலையும் திகிலும் ஏற்பட்டு அவளை வதைக்க ஆரம்பித்தன; உலகத்தார் எல்லோருமே தன்னைப் பகைத்து, தனக்குப் பெருத்த இடர்களைச் செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களோ என்னலாம்படி, எந்த நிமிஷத்தில் எந்த மனிதரும் ஒரு புதிய பிராதோடு வந்து தன்னை வளைத்துக் கொள்ளக் கூடுமென்ற ஓர் எண்ணமும், உலகம் இவ்வளவு கெட்டதா என்ற நினைவும், உலகத்தில் வாழ்வது இவ்வளவு கடினமானதா என்ற மலைப்பும் தோன்றி அவளை ஒறுத்தன. நாலா பக்கங்களிலும் வளைத்துக் கொண்டு தன்னை வதைக்கும் துன்பங்களிலிருந்து மீண்டு, கவலையற்ற வாழ்க்கையாக வாழும் காலமும் வரப் போகிறதா என்ற ஏக்கமும், விசனமும், அவமானமும் பெருத்த சுமைகளாக அவளது மனத்தையும் தேகத்தையும் அழுத்திக் கொண்டிருந்தன. தொடர்ந்து சில தினங்களாக ஆகாரம், துயில், ஒய்வு முதலியவை இன்றி மாறிமாறித் துன்பத்தினாலும் விபத்தினாலும் வருத்தப் பட்டவளாக இருந்தவள் ஆதலால், கல்யாணியம்மாள் மாலை ஆறு மணி சமயத்தில் கண்விழித் தெழுந்தாள்; எழுந்தவள் உடனே கடிகாரத்தைப் பார்க்க, அதன் கைகள் ஆறுமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/256&oldid=646103" இலிருந்து மீள்விக்கப்பட்டது