பக்கம்:மதன கல்யாணி-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s:az:& -

254 மதன கல்யாணி

பணிமகள், “தெரியும்; துரைஸானியம்மாளுக்கு உடம்பு அநேகமாக குணமடைந்து விட்டது. இருந்தாலும் அவர்கள் படுக்கையிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்ன; குழந்தையும், தாதிகளும் கூடவே இருந்து, ஆகவேண்டியதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

உடனே கல்யாணியம்மாள், “சரி, அதிருக்கட்டும்; பொன்னம் மாள் தன்னுடைய மனுவியாள் யாரையோ பார்க்கப் போவதாகச் சொல்லி உத்தரவு கேட்டுக் கொண்டு, இன்று காலையில் போனாள். அவள் வந்துவிட்டாளா? அவளை நீ பார்த்தாயா?” என்றாள்.

பணிமகள், “அவளை நான் இன்று காலையிலே தான் பார்த்தேன்; அதற்குப் பிறகு அவள் என்னுடைய கண்ணில் படவில்லை,” என்றாள்.

கல்யாணியம்மாள், “சரி, அப்படியானால் நீ போய் அவள் வந்து எங்கேயாவது இருந்தால், அழைத்துக் கொண்டு வா!” என்று கூற, பணிமகள் உடனே போய்த் தேடிப் பார்த்துவிட்டு அழைக்கால் நாழிகை நேரத்தில் திரும்பி வந்து, “அவளை எங்கேயும் காணோம்; அவள் இன்னமும் திரும்பி வரவில்லை போலிருக்கிறது” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “சரி; வராவிட்டால் தொலையட்டும்; இன்று முழுதும் ஸ்நானம் செய்யாமையால் உடம்பு அசுதியாக இருக்கிறது; உடனே போய் ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்; நான் இதோ வருகிறேன்” என்று கூற, பணிமகள் உடனே போய்விட்டாள்.

காலையில் போன பொன்னம்மாள் அதுகாறும் திரும்பி வராதிருந்தது, கல்யாணியம்மாளது மனதில் ஒருவித சஞ்சலத்தை உண்டாக்கியது. ரகசியம் வெளியாகிவிட்டதாகையால், அன்றைய தினம் பத்திரத்தை அபகரிக்கப் போக வேண்டாம் என்ற ஒர் அற்ப விஷயத்தைச் சொல்லிவிட்டு வர, அவ்வளவு கால தாமதம் ஆக வேண்டிய காரணம் என்ன என்று கல்யாணியம்மாள் யோசித்து யோசித்துப் பார்க்க, எதையும் நிச்சயமாக அறிய மாட்டாதவளாய், மறுபடியும் தளர்வடைந்து, மெளனமாக நடந்து, ஸ்நான அறைக்குப் போய், நன்றாக நீராடியபின் சுமார் ஏழரை மணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/258&oldid=646107" இலிருந்து மீள்விக்கப்பட்டது