பக்கம்:மதன கல்யாணி-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மதன கல்யாணி

அரக்கனைக் கண்டவுடனே பிரமிப்பும் திகிலுமடைந்து கிடுகிடுத்துப் போய் வாயைத் திறந்து பேசமாட்டாமல் மெளனமாக இருந்து பொன்னம்மாளை நோக்கி, “ஏன் இவ்வளவு தாமசம்?” என்று கேட்பவள் போலத் தனது முகஜாடையால் அறிவித்தாள்.

அதற்குள் அவர்கள் மூவரும் கல்யாணியம்மாளுக்கருகில் வந்து நெருங்கி நின்றனர். கட்டையன் குறவன் குடிவெறி முகத்திலேயே விளங்க, ஒரு பெருத்த காட்டு மிருகம் போலக் காணப்பட்டான். பொன்னம்மாளது முகமும், கருப்பாயினது முகமும் சந்தோஷத் தைக் காட்டின. அதைக் கண்ட கல்யாணியம்மாளது மனதில் ஒரு வகையான துணிவு ஏற்பட்டது; அப்போது பொன்னம்மாள் கல்யாணியம்மாளைப் பார்த்து, “நான் காலையிலே போனவ, அது மொதக் கொண்டு, கருப்பாயியோடெ ஊட்டுலேயே குந்திக்கிட்டுக் கெடந்தேன். அவ ஊட்டெவிட்டுக் காத்தாலெ போனவளாம்; அப்பாலெ வரவே இல்லே. ராத்திரிப் பன்னண்டு மணி நேரம் வரெயிலெ அங்கிட்டே காத்திருந்தேன். இவுங்க ரெண்டு பேரும் இப்பதான் ரெண்டு நாளிக்கு மின்னே வந்தாங்க. இவுங்களை நேருலெயே இட்டாந்துட்டேன். காரியமும் முடிஞ்சு போச்சுதாம்” என்று சந்தோஷமாகக் கூறினாள். -

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த களிப்படைந்து, “காரியம் முடிந்து போய்விட்டதா?” என்று வியப்போடு கேட்க, உடனே கருப்பாயி, “கட்டையனும் கருப்பாயியும் மனசுவச்ச காரியம் முடியாமெப் போவுமா! அவன் எட்டுக்கண்ணு படச்ச ஈசுபரனா இருந்தாலும், கதறக்கதற அடிச்சுமாட்டமா. அப்பிடி இருக்க இந்த வாலாம்பா எந்த மூலை! நானும் கட்டையனும் போனோம். கட்டையன் அவுங்க ரெண்டு பேரையும் குண்டுக் கட்டாக் கட்டிப் போட்டான். நான் ஊடெல்லாம் தேடிப் பார்த்தேன்; அந்தப் பொம்புள்ளே இந்தப் பத்தரத்தே ரவுக்கெக் குள்ளற சொருகி வச்சிருந்தா. பயந்துக்கிட்டுக் குந்தினாப்பலே எடுத்துக் குடுத்துப்புட்டா. இதோ இருக்குது பாத்துக்குங்க!” என்று கூறிய வண்ணம், பத்திரத்தைப் பிரித்துக் காட்ட, அதனடியில் தனது கையெழுத்தும், சிவஞான முதலியாரது கையெழுத்தும் இருந்ததைக் கண்ட கல்யாணியம்மாள் கரைகடந்த மகிழ்ச்சி அடைந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவளாய்க் குதித்துக் கொண்டெழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/260&oldid=646112" இலிருந்து மீள்விக்கப்பட்டது