பக்கம்:மதன கல்யாணி-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257

இரும்புப் பெட்டியண்டை ஒடி இருபதினாயிரம் ரூபாய்க்கு நோட்டுகளை அள்ளிக் கொண்டு வந்து, கட்டைய னுக்குப் பதினாயிரம் ரூபாயும் கருப்பாயிக்குப் பதினாயிரம் ரூபாயும் கொடுத்து, அவர்களது சாமர்த்தியத்தைப் பற்றி வாய் கொண்ட மட்டும் புகழ, அவர்கள் இருவரும் கல்யாணியம் மாளைக் காட்டிலும் இரட்டிப்பிலும் மடங்கு சந்தோஷம் அடைந்தவர்களாய் நோட்டுகளை வாங்கித் தங்களது வஸ்திரங்களில் பத்திரமாக முடிந்து கொண்டனர். கல்யாணியம்மாள் கருப்பாயியால் மேஜையின் மேல் வைக்கப்பட்ட பத்திரத்தை மிகுந்த ஆவலோடும், அளவற்ற மகிழ்ச்சியோடும் எடுத்து, அதை ஒரு முறை படித்துப் பார்த்து, அடியிலிருந்த கையெழுத்துக்கள் உண்மையில் தங்க ளுடையவைகள் தானே என்பதை ஆராய்ந்து, திருப்தி அடைந்த வளாய், அந்த ஒரு நிமிஷ நேரம் ஒப்புயர்வற்ற பேரின்பம் அடைந்திருந்தாள். அப்போது அவள் அந்தப் பத்திரத்தைத் தற்செயலாக திருப்பிப் பார்க்க, அதன் பின்புறம் முழுதிலும் எழுத்துக்கள் காணப்பட்டன; கல்யாணியம்மாள் உடனே வியப்படைந்து அவற்றைப் படிக்கவே, ஆகா! அந்தப் பத்திரம் அன்றைய பகலில் மைனரால் சப்ரிஜிஸ்டிராரது கச்சேரியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுப் போயிருந்த தென்ற விவரங்கள் அந்தப் பக்கத்தில் காணப்பட்டன. அதை உணர்ந்த கல்யாணியம்மாள் - கதிகலங்கிப் போய், ஆலகால விஷத்தை உண்டவள் போல ஸ்மரணை தப்பிப் படேரென்று கீழே சாய்ந்து விட்டாள்.


26-வது அதிகாரம் கோட்டைவிட்ட போலிஸ்புலி குலாமாராவுத்தர்

அவ்வாறு உணர்வற்று கீழே விழுந்த கல்யாணியம்மாள் மறுபடியும் தனது உணர்வைப் பெற்று விழித்த போது, பொழுது நன்றாக விடிந்திருந்தது; சூரியன் உதயமாகி மிகுந்த கோபத்தோடு ஆகாயத்தில் உயர்ந்து கொண்டிருந்தான். கல்யாணியம்மாள் தனது பஞ்சணையின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்தாள். பொன்னம்மாள் ஒருத்தியே கட்டிலிற்கருகில் இருந்த ஒர் ஆசனத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/261&oldid=646114" இலிருந்து மீள்விக்கப்பட்டது