பக்கம்:மதன கல்யாணி-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - மதன கல்யாணி

மேல் உட்கார்ந்து, அந்தச் சீமாட்டியின் அழகிய வதனத்தை உற்று நோக்கிய வண்ணம் இருந்தாள். அந்த நிலைமையில் மெதுவாகத் தன்து கண்களைத் திறந்து நாற்புறங் களையும் பார்த்த கல்யாணி யம்மாள், மிகுந்த வியப்பும் திகைப்பு மடைந்தாள். முதல் நான் இரவில் வந்திருந்த கட்டையன் குறவனும், கருப்பாயியும், தன்னிடத்தில் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டதும், மறுநாட் காலை வரையில் தான் துங்கியோ அல்லது ஸ்மரணை தப்பியோ, மெய்ம்மறந்து கிடந்ததும் ஒருவிதக் கிலேசத்தை உண்டாக்கின; அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்து திண்டில் சாய்ந்து கொள்ள, அதைக் கண்ட பொன்னம்மாள் எழுந்து பஞ்சனையினருகில் வந்து நின்று, “ஒடம்பு என்ன செய்கிறது? அப்ப படுத்த நீங்க இந்நேரம் கண்ணெத் தொறக்காமெக் கெடந்தது எனக்கு ரொம்ப பயமா இருந்திச்சு; இப்ப ஒடம்பு சவிக்கியந்தானா?” என்று வினவினாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் நிரம்பவும் அருவருப்பாக வும் தளர்வாகவும் பேசத் தொடங்கி, “என்ன உடம்பு வேண்டி இருக்கிறது! நான் நல்ல ஜென்மம் எடுத்தேன்! எனக்கு நல்ல குழந்தைகள் வந்து வாய்த்தார்கள்! அவர்கள் ஒவ்வொருவராலும் இப்படிப்பட்ட இழிவுகளுக்கும் அவமானத்துக்கும் துன்பங்களுக் கும் ஆளாகி இருந்து வாழ்வதைவிட இந்த உயிரை விட்டு விடுவதே மேலானது. இந்த உயிரை விட்டுவிடுவதற்கும் வழி தெரியவில்லை. ஒரே நொடியில் உயிரை அழித்துவிடக் கூடிய தின வீரபாஷாணம் எங்கேயாவது அகப்பட்டால், கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறாயா? கொடுத்தால், என் உடம்பில் உள்ள பிணிகள் எல்லாம் ஒரே நொடியில் தீர்ந்து போகும்” என்று மிகுந்த விரக்தியோடு பேசினாள்.

பொன்னம்மாள்:- (மிகுந்த அபிமானத்தோடும் அன்போடும் பேசத்தொடங்கி) ஏம்மா இதுக்குள்ளற இப்பிடி பயப்பட்றீங்க? இது என்னா தலெ போற காரியமா? சின்ன வயசிலே கொயந்தைங்க என்னமோ அப்படி ஒரு காரியத்தெச் செய்யறது தான். அதுக்காவ பெரியவங்க நாக்கெப் பிடுங்கிக்கினு செத்தாப் பூடுவாங்க. இந்தப் பத்தரம் ஒங்களே என்னா செய்ய முடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/262&oldid=646116" இலிருந்து மீள்விக்கப்பட்டது