பக்கம்:மதன கல்யாணி-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259

அந்த வாலாம்பா முண்டெ நாளைக்குள்ளற தொலெஞ்சு பூடப் போறா; உடனே நாம்ப மைனருக்குக் கண்ணிமணியம்மாளெப் புடிச்சுக் கட்டிப்புட்டா எல்லாம் சரியாப்போவுது அதுக்குள்ளற தொரெசானியம்மாளெயும் ராமலிங்கப்புரத்துலே கட்டிக் குடுத்துடப் போறோம்; ஒடனே அவுங்க ரெண்டு பேரும் அடங்கிப் பூடுவாங்க; அப்புறம் நமக்கென்ன கவலை? சின்னக் கொயந்தை தங்கமானது; அதெப்பத்திப் பயமே இல்லிங்க - எனறான,

கல்யாணியம்மாள்:- (பெரிதும் வியப்படைந்து) என்ன அந்த பாலாம்பாள் நாளைக்குள் தொலையப் போகிறாளா! நாளைக்குள்

எங்கே போகப் போகிறாள்?-என்றாள்.

பொன்னம்மாள்:- அவளாப் போவமாட்டாதான்; நேத்தி ராத்திரி வந்திருந்தானே கட்டெயன் கொறவன்; அவன் கடைசியாப் போவச்ச்ே சொல்லிவிட்டுப் போனான்; நாளெ ராவுக்குள்ளற அவளெ அந்த வங்களாவுலே இருந்து களப்பிக் கொண்டு போயி, அவ திரும்பி வராமெப் பண்ணிப்புறேனுன்னு சொல்லிப்புட்டுப் போயிருக்கறான். அவன் சொன்னானுன்னா, சூரியன் சந்தரன் வடக்கு தெக்காப் போனாலும், அவனோடெ பேச்சு மாத்தரம் பெறளாது - என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஒருவாறு திகிலும் திகைப்பு மடைந்து, “அதென்ன சங்கதி? கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே! கட்டையன் குறவன் பாலாம்பாளை எதற்காக அப்படிக் கொண்டு போய் மறைத்துவிடப் போகிறானாம்? எனக்கு நன்றாக விளங்கும்படி பேசு” என்றாள்.

பொன்னம்மாள்:- நேத்து ராவுலே நீங்க அந்தப் பத்தரத்தெப் பாத்து மொதமொதல்லே சந்தோஷப்பட்ட அப்பாலே, அதெத் திருப்பிப் பாத்துப்புட்டு மயங்கிப் போயி உளுந்தீங்கள். அப்ப ஒங்க வாயிலே இருந்து ஒரு பேச்சு வந்திச்சு: “ஐயோ! பத்தரத்தை இஸ்திரி ஆபீசுலே பதிஞ்சு வச்சுப்புட்டானே இந்தப் பத்தரத்தெ எடுத்தாந்ததுலே ஒண்னும் பெரயோசன மில்லியே” இன்னு நீங்க சொல்லிக்கினே உளுந்தீங்க. அந்தப் பேச்செக் கேட்ட ஒடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/263&oldid=646117" இலிருந்து மீள்விக்கப்பட்டது