பக்கம்:மதன கல்யாணி-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263

என்று தந்திரமாகச் சொல்லி, எல்லோரையும் எச்சரித்துவிட்டு, அவ்விடத்தை விட்டுத் தனது அந்தப்புரத்திற்கு வந்து சேர்ந்தாள். பாலாம்பாளது பத்திரத்தை அபகரித்த விஷயத்திலும், அன்றைய தினம் கட்டையன் குறவன் பாலாம்பாளைத் துக்கிக் கொண்டு போய் விட்டால் அந்த விஷயத்திலும், தனக்கும் எவ்விதமான போராட்டம் ஏற்படுமோ என்ற கவலை ஒருபுறம் வதைத்தது. முதல் நாள் துரைராஜாவினால் ஏற்பட்ட சஞ்சலமும் அச்சமும் இன்னொரு புறத்தில் வதைத்தன. அப்போது துரை ஸானியம்மாளைப் பார்த்துவிட்டு வந்தது முதல், அவளைப் பற்றிய கவலையும் எழுந்து வளைத்துக் கொண்டது. அவள் திரும்பவும் மோகனரங்கனைக் காணும் முன் அவளை எப்படியாகிலும் ராமலிங்கபுரம் ஜெமீந்தாரது குமாரனுக்கு மணம் புரிவித்து வைத்து விட வேண்டும் என்ற நினைவும் ஆவலும் துடித்துக் கொண்டிருந் தன. ராமலிங்கபுரம் சமஸ்தானத்து ஜெமீந்தாருக்கு அந்தச் சீமாட்டி கடிதம் எழுதியனுப்பியது அதற்கு முந்திய நாளைக்கு முந்திய நாள் ஆதலால், அன்றைய தினம் அந்த கடிதத்துக்கு மறுமொழி வந்திருக் குமோ என்ற நினைவும் ஆவலும் எழுந்து தூண்டின. ஆகவே, அன்றைய தபால்களை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு பதப்பைக் கொண்டவளாய்க் கல்யாணியம்மாள் விசையாக நடந்து வந்து, தபால்கள் வைக்கப்பட்டிருந்த மேஜைக்கருகில் இருந்த நாற்காலியின் மீது அமர்ந்தாள். அப்போது பொன்னம் மாள் எழுந்து வந்து மேஜையின் ஒரு பக்கத்தில் நின்று கொண் டிருந்தாள். உடனே கல்யாணியம்மாள் பொன்னம்மாளை நோக்கி, “நான் ராமலிங்கபுரத்துக்கு எழுதின கலியாண கடிதத்துக்கு அநேகமாக இன்றைய தினம் பதில் கடிதம் வந்திருக்க வேண்டும். வந்திருந்ததால் அது, இந்தக் கடிதங்களுக்குள் தான் இருக்க வேண்டும்” என்று கூறிய வண்ணம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கார்டுகள் கவர்கள் ஆகிய சுமார் 20 காகிதங்கள் அடங்கிய அடுக்கைத் தனது கையில் எடுத்தாள் அப்போது பொன்னம்மாள், “அங்ஙனெ யிருந்து கடுதாசி வந்திருந்தா மஞ்சக்குறி இருக்குமே. தள்ளிப்பாருங்கள்” என்றாள். அதுவும் நல்ல யோசனை தான் என்று நினைத்த கல்யாணியம்மாள் கடிதங்களை எல்லாம் ஒவ்வொன்றாகத் தள்ளி எதிலாகிலும் மஞ்சட்குறிகள் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/267&oldid=646125" இலிருந்து மீள்விக்கப்பட்டது