பக்கம்:மதன கல்யாணி-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23

பெரியவராய் இருக்கிறீரே என்னும் நினைவினால், இவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டிருந்தேன். அந்த மரியாதைகூட ஏன் பார்த்தோம் என்ற விசனம் இப்போது உண்டாகிறது” என்றாள்.

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் புரளியாக நகைத்து, “ஓகோ அப்படியா இந்த அந்தப்புரத்துக்குள் ரகசியமாக நடந்த சங்கதி வெளியாகிவிட்டதே என்று இதுவரையில் உங்களுடைய முகமே காட்டிவிட்டது. பயத்தினால் பத்து நிமிஷ நேரம் வாய் குழறிப் போய்விட்டது. நான் வயசான கிழவனாயிற்றே என்ற மரியாதையினால், உங்களுடைய வார்த்தைகள்கூட பயபக்தியைக்

• #

காட்டியிருக்கலாம்” என்று கூறிய வண்ணம் வெளியில் போய் விட்டார்.

உடனே கல்யாணியம்மாள், வெளியில் நின்ற வேலைக்காரனை அழைத்து, தனது உடம்பு அசெளக்கியமாக இருப்பது பற்றி, தான் சயனித்து சாயுங்காலம் வரையில் துயில வேண்டும் என்றும், எவர் வந்தாலும் சாயுங்காலத்துக்கு மேல் வரும்படி சொல்லி அனுப்பி விட வேண்டும் என்றும் கூறி உத்தரவு செய்து அவனை அனுப்பி விட்டு, கதவுகளைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு, கட்டிலின் மேல் ஏறிக் குப்புறப் படுத்துக் கொண்டு, குழந்தையைப் போல ஒவெனக் கதறியழத் தொடங்கினாள். பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக முடிந்ததைப் போல, தான் ஏதோ ஒர் அற்பத் தவறு செய்ததிலிருந்து, விஷயம் விபரீதமாக வளர்ந்து விட்டதே என்ற கவலையும், அதனால் தனது மானமே போய் விடும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதே என்ற கலக்கமும், மைனரால் பெருத்த சங்கடங்கள் உண்டாய்விட்டனவே என்ற துயரமும், தனது மூத்த புத்திரியே தனக்கு எதிராளி போல, தனது குற்றங்களைக் கண்டு இடித்துக் காட்டுகிறாளே என்ற சஞ்சலமும், இன்னும் பலவகையான துன்பங்களும் ஒன்றுகூடி அவளைச் சித்திரவதை செய்தமையால், அவள் தனது மனோவேதனைகளைச் சகிக்க மாட்டாதவளாய், கட்டிலில் புரண்டு புரண்டு அழுத வண்ணம் கிடந்ததன்றி, தனது செல்வம் யாவும் போனாலும், தனது மானம் ஒன்றை மாத்திரம் இழக்காமல் எப்பாடுபட்டாகிலும் எக்காரியம் செய்தாகிலும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/27&oldid=646130" இலிருந்து மீள்விக்கப்பட்டது