பக்கம்:மதன கல்யாணி-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மதனகல்யாணி

அவள் போன பிறகு கல்யாணியம்மாள் சித்தப்பிரமை கொண்டவள் போல வெறுவெளியைப் பார்த்து விழித்துக் கொண்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தாள். மற்ற எல்லாக் கவலைகளையும் விட துரைஸானியம்மாளைப் பற்றிய கவலையே சகிக்க ஒண்ணாத அபாரமான துன்பமாகத் தோன்றி வதைத்தது. அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தபடி துரைஸானியம்மாளை மோகனரங்கனது மனிதர்கள் பலவந்த மாகக் கொண்டு போக நேருமானால், அதன்பிறகு அந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு, ஊராரினது முகத்தில் விழிப்பதை விட தான் எந்த தான் எந்த வகையிலாவது தனது உயிரை மாய்த்துக் கொள்வதே சரியான காரியம் எனத் தோன்றியது. அப்படிப்பட்ட மகா கலவரமான மனநிலைமையில், மிகுதியிருந்த கடிதங்களை எடுத்துப் படிக்கவும் அந்தச் சீமாட்டிக்கு எண்ணம் உண்டாகவில்லை. பெருத்த விசனத்திலும் கவலையிலும் ஆழ்ந்து அரை நாழிகை நேரம் வரையில் கிடந்த கல்யாணியம்மாள் மெதுவாக நிமிர்ந்து, அந்தக் கடிதத்தை எடுத்து இன்னொரு முறை உற்று நோக்கினாள். மோகனரங்கனது எழுத்தின் அடையாளம் அவளுக்கு நன்றாகத் தெரியும் ஆதலால், அந்தக் கடிதத்தின் எழுத்து அவனால் எழுதப்பட்டதா அல்லவா என்பதை ஆராய்ந் தாள். கடிதத்தின் எழுத்துக்கள் அவனால் எழுதப்பட்டவை அல்லவெனத் தோன்றியது. அந்தக் கடிதத்திலிருந்த சங்கதியை இன் னொரு தரம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. அவ்வாறே அவள் கடிதத்தை இன்னொருமுறை படித்தாள். அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க, அவளது மனோவேதனை விஷம் போலப் பெருகிக் கொண்டே இருந்தது. ஒரு நாழிகைக்கு மேலாயிற்று. அப்படி ஆனது ஒரு நாள் கழிந்தது போல இருந்தது. ஒரு கால் அதற்குள் யாராகிலும் துரைஸானியம்மாளை அபகரித்துக் கொண்டு போயிருப்பார்களோ என்ற அச்சமும், அதற்கு மேல், அவளைத் தனியாக விட்டு வைத்திருக்காமல் தனது பார்வை யிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நினைவும் தோன்றின. அவள் அப்போது என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற ஒர் அவா உண்டாயிற்று; ஆகவே, வக்கீல் வருவதற்குள் தான் போய்விட்டு வந்துவிடலாம் என்று தீர்மானித்துக் கொண்டவளாய், கல்யாணியம்மாள் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/272&oldid=646135" இலிருந்து மீள்விக்கப்பட்டது