பக்கம்:மதன கல்யாணி-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27?

கோமளவல்லி:- அக்கா! நீ சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறதே! இரண்டு நாளைக்கு முன் ஒரு பகலில் உனக்குத் தலை நோவாக இருக்கிறதென்றும், அறையில் தனியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தாய். அதுமுதல் நீ இங்கேயே படுத்திருக்கிறாய்; மருந்துகளையும் சாப்பிட்டு வருகிறாய்; அம்மாளும் வந்து வந்து பார்த்து உன்னுடைய தேகஸ்திதியைப்பற்றி விசாரித்துவிட்டுப் போகிறார்கள். அப்படி இருக்க, நீ தேக அசெளக்கியத்தோடு இருக்கிறாய் என்று நினைக்காமல் நான் வேறே எப்படி நினைக்கிறது?

துரைஸானி:- நாங்கள் ஆயிரம் சொல்லுகிறோம். சொன்னாலும் உனக்குச் சுய அறிவும் யூகமும் கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? ஏதோ தலைவலி உண்டானால், இரண்டொரு நாழிகை நேரத்தில் போய்விடுகிறது. இந்த மூன்று நாட்களாக தலைவலிக்காக யாராவது இப்படிப் படுக்கையிலேயே படுத்திருப்பதுண்டா? இந்த இரண்டு நாட்களாக எனக்குத் தலைநோவு இல்லை என்று நான்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்; அப்படி இருக்க, என்னைப் படுக்கையிலேயே வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? எனக்கு உண்மை யிலேயே ஏதாகிலும் வியாதி இருந்தால், இந்நேரம் எத்தனை வைத்தியர்கள் வந்திருப்பார்கள்! அம்மாள் என்னை விட்டு அப்பால் நகருவார்களா? அதை எல்லாம் நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா? உலகத்தில் உள்ள கபடமெல்லாம் திரண்டு ஒரு வடிவமாக வந்திருக்கும் அம்மாளுடைய வயிற்றில், இப்படிப்பட்ட சுத்த வெள்ளை மனுஷியான நீ எப்படி வந்து பிறந்தாய் என்பதுதான் எனக்கு அதிக ஆச்சரியமாக இருக்கிறது.

கோமளவல்லி:- அக்கா! நீ என்னை எவ்வளவு தூரம் துவகித் தாலும் வைதாலும் எனக்கு வருத்தமே உண்டாகவில்லை. நம்முடைய அம்மாளைப் பற்றி நீ தூஷணையாகப் பேசுவதைக் கேட்பது மாத்திரம் எனக்குக் கொஞ்சமும் சகிக்கவில்லை, என்ன காரணத்தினாலோ உனக்கு அம்மாளிடத்தில் இவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள், தலை போவதானாலும், கெட்ட காரியத்தில் பிரவேசிக்கக் கூடியவர்கள் அல்ல. அயோக்கியத்தனம் செய்கிறவர்களுடைய முகத்தில்

ம.க.!!-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/275&oldid=646141" இலிருந்து மீள்விக்கப்பட்டது