பக்கம்:மதன கல்யாணி-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மதன கல்யாணி

விழிப்பதும் அவர்களுக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட பரிசுத்தமான தாயின் வயிற்றில் பிறந்த நீ மாத்திரம் ஏன் இப்படித் தனியாக ஒரு புது மனுவழியாக இருக்கிறாய்! அம்மாளை நீ கபடி என்று சொல்லுகிறாயே, அன்றைய தினம் தலை நோவென்று சொல்லி விட்டு வந்த நீ இப்போது எல்லாம் பொய் என்று சொல்லுகிறாயே. இதை என்னவென்று சொல்லுகிறது? என்னிடத்தில் நீகபடமாகத் தானே இந்த மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறாய். தன்னைப் போலவே உலகம் எங்கும் இருக்கும் என்று நினைப்பதே பெரும்பாலோருடைய சுபாவம் ஆகையால், நீ உன்னுடைய கபட குணத்தினால் அம்மாளுடைய காரியத்தை எல்லாம் கபடம் கபடம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறாய் போலிருக் கிறது. உண்மையில் அம்மாள் பரிசுத்தமான மனசை உடைய வர்கள். அவர்கள் எந்த விஷயத்திலாவது நம்மிடத்தில் கபடமாக நடந்து கொண்டிருந்தால், அது நம்முடைய நன்மையையும் கூேடிமத்தையும் கருதியதாக இருக்குமேயன்றி, அது நம்மைப் பாதிக்கக்கூடியதாக ஒரு நாளும் இராது. தாம் பெற்ற குழந்தை களுக்கு எவராவது துரோகம் செய்வார்களா ஒருநாளும் இல்லை. நீ நம்முடைய அம்மாள் விஷயத்தில் வைத்திருக்கும் கெட்ட நினைவை எல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் சொல்லுகிறவைகள் செய்கிறவைகள் ஆகிய எல்லாம் நல்லவைகளாகத்தான் இருக்கும் என்ற ஒரு பக்தியையும் அந்தரங்க விசுவாசத்தையும் வைத்து நடந்து கொள்வாயானால் உனக்கு எவ்விதக் குறைவும் ஏற்படாது. நீ எப்போதும் கேஷமமாகவே இருப்பாய். இப்படிப்பட்ட துன்ப மெல்லாம் உண்டாகவே உண்டாகாது. இந்த மூன்று நாட்களாக உனக்குத் தலைநோவென்று அம்மாள் உன்னைப் பொய்யாக வைத்திருப்பதாகப் பொருள்படும்படியாகவும் எங்களை எல்லாம் உன்மேல் காவலாக வைத்திருக்கிறார்கள் என்றும் நீ சொன்னாயே. அதற்குக் காரணமென்ன? அதைச் சொல். குற்றம் யாருடைய தென்பதை நான் உடனே சொல்லுகிறேன்.

துரைஸானி:- நீ இவ்வளவு அசடாகவும் கர்னாடக மனிஷியாக வும் இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. தாய் தகப்பன் என்றால், அவர்கள் மாத்திரம் சர்வமும் தெரிந்த மேதாவிகளா? அவர்களுக்குப் பிள்ளைகளைவிட வயசு மாத்திரம் அதிகம் என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/276&oldid=646142" இலிருந்து மீள்விக்கப்பட்டது