பக்கம்:மதன கல்யாணி-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மதன கல்யாணி

ஒரே நினைவைக் கொண்டவளாய், சிந்தனைக் கடலில் ஆழ்ந்து விட்டாள்.

கல்யாணியம்மாளது நிலைமை இவ்வாறிருக்க, ஜன்னலுக் கப்பால் ஒளிந்து நின்று தங்களது தாய்க்கும் பசவண்ண செட்டி யாருக்கும் நடந்த சம்பாஷணையை ஒரு சொல்லேனும் விடாமல் கேட்டிருந்த துரைஸானியம்மாளும், கோமளவல்லியும் அவ்விடத்தை விட்டு மெல்ல அப்பால் சென்று, தத்தம் விடுதியை அடைந்து சிந்தனையில் ஆழ்ந்தனர்.

மதனகோபாலனைப் பற்றி, தங்களது தாய் கூறிய வரலாறு உண்மையானதல்ல என்பதை சிற்சில சூசனைகளால் முதல் நாளில் இருந்தே சந்தேகித்திருந்த துரைஸானியம்மாள் பசவண்ண செட்டியார் சொன்ன வரலாறே உண்மையான தென்று தீர்மானித் துக் கொண்டதன்றி, தங்களது தாய் கேவலம் விபசாரி என்றும் வெளிக்கு மாத்திரம் மகா சுத்தமான மனுவியைப் போல நடித்து, பிறரை அற்ப குற்றங்களுக்கெல்லாம் மிகவும் கொடுமையாக நடத்தி, தனது உண்மையான யோக்கியதையை எவரும் சந்தேகியாமல் இருக்கும் பொருட்டு அதிக்கிரமமான பதிவிரதை வேஷம் போட்டு நடலக்காரி என்று நினைத்துக் கொண்டதன்றி, உலகத்தில் உள்ள எல்லா ஸ்திரீகளும் இப்படியே வெளி வேஷம் போட்டு உள்ளே அசுத்தர்களாக இருப்பார்கள் என்றும் யூகம் செய்து கொண்டாள். அவள் நல்ல பக்குவகாலம் அடைந்து, செழுமை நிறைந்த யெளவன மங்கை ஆதலால், அவளது மனதில் பலவகையான துர்நினைவுகளும், துராசைகளும் தலைகாட்டத் தொடங்கின. அவள் எதையும் துணிந்து செய்யக்கூடிய தைரியசாலி ஆனாலும், அதுகாறும் தனது தாயின் கட்டுப் பாட்டினாலும் அவளிடத்தில் கொண்ட அச்சத்தினாலும் பலவாறு சபலித்துச் சென்ற தனது மனதை மிகவும் பாடுபட்டு அடக்கிக் கொண்டே வந்திருந்தாள். இப்போது தனது தாயே விபகாரியாக இருப்பதைக் காணவே, அவளுக்குத் தானும், தனது மனம் போன போக்கில் தனது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஒர் எண்ணம் உண்டாகிவிட்டது. ஆகவே, அவள் அதுகாறும், தன் மனதிற்குள்ளாகவே காதலித்து வந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/28&oldid=646149" இலிருந்து மீள்விக்கப்பட்டது