பக்கம்:மதன கல்யாணி-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277

பிடிக்காது; ஒரு புருஷன் மேல் ஆசை வைத்தேன்; அதை அடக்க என்னால் முடியவில்லை; நான் அதை வெளியில் காட்டி, அதன்படி நடந்துவிட்டேன். அந்தப் புருஷனை நான் நாயகனாகவும் அடைந்து விட்டேன். இந்த விஷயத்தில் நான் உண்மையில் தவறு செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்; இப்போது அம்மாள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், என் ஆசை நாயகனான அந்த மோகனரங்கனை மிகவும் தந்திரமாக வெளி யூருக்கு அனுப்பிவிட்டு, என்னை இந்த இடத்தில் சிறை வைத்திருக்கிறார்கள்; ராமலிங்க புரம் ஜெமீந்தாருடைய பிள்ளைக்கு என்னைக் கட்டிக்கொடுத்து விடுவதாகத் தீர்மானித்து அவர்களுக்குக் கடிதம் எழுதி அதற்கு பதிலை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் கள். ராமலிங்கபுரம் ஜெமீன்தாருடைய பிள்ளையின் பார்வைக்கு, நான் இதுவரையில் வேறே புருஷனை மனசாலும் நினைக்காத மகா பரிசுத்தமான கன்னிகை போல நடித்து அவனை வஞ்சித்துக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அம்மாள் சொல்லுகிறார்கள் அப்படிப்பட்ட படுமோசத்தில் இறங்க எனக்கு இஷ்டமில்லை. நல்லதோ, கெட்டதோ, தவறானதோ, சரியானதோ நான் ஒரு சம்பந்தம் செய்து விட்டேன். அதை மறைக்கவும், பிறரை வஞ்சிக்கவும் எனக்கு மனமில்லை. உள்ளும் புறமும் ஒத்து நடக்க நாணி ஆசைப்படுகிறவள் ஆகையால் நான் அந்த மோகனரங்க னோடு போய்விட எண்ணுகிறேன். அம்மாள் அதைத் தடுக்கிறார்கள், யார் சொல்வது சரியானது, யார் சொல்வது தவறானதென்பதை

நீயே சொல் பார்க்கலாம்.

கோமளவல்லி:- சிவசிவா இருந்திருந்து இந்த மோகனரங் கனையா பிடித்துக் கொண்டாய் இந்தச் சங்கதியை வாயில் வைத்துச் சொல்ல உனக்கு வெட்கமில்லாமல் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது! அடாடா! நம்முடைய குலமென்ன! கோத்திரமென் பெருமையென்ன செல்வாக்கென்ன ‘ புத்தி இப்படிப்பட்ட இழிந்த காரியத்தைச் செய்யவும் நினைத்ததா: அவன் கேவலம் நம்மிடத்தில் பதினைந்து ரூபாய்க்கு சேவகா விருத்தி செய்யும் ஒரு பேடிப் பையன் தாய்தகப்பன் யாரோ,

அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவனோ, அது சுவாமிக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/281&oldid=646153" இலிருந்து மீள்விக்கப்பட்டது