பக்கம்:மதன கல்யாணி-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 மதன கல்யாணி

வெளிச்சம். ஆனால் அவன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறான். எஜமானுடைய வீடாயிற்றே என்று நம்மிடத்தில் எல்லாம் பயந்து பணிவாக நடந்து கொள்ளுகிறான்; அவனுடைய உடம்பின் அழகையும் பணிவையும் தவிர அவனுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டதென்பதையும், அவனுக்குக் கல்வியறிவு எவ்வளவு என்பதையும் நாம் கவனிக்க வேண்டாமா? அவன் யோக்கியதை, நாணயம் முதலியவைகள் உள்ளவனாக இருக்கிறானா என்பதைப் பார்க்க வேண்டாமா? முக்கியமான அம்சங்களை எல்லாம் கவனியாமல், அவனுடைய உடம்பின் அழகொன்றையே அபாரமான சிறப்பாகவும் போதுமான மேம்பாடாகவும் மதித்து நீ உன்னுடைய பெயரையும் இந்தக் குடும்பத்தாருடய பெயரையும் கெடுத்து நமக்கெல்லாம் என்றைக்கும் அழியாத அவமானத்தையும், களங்கத்தையும் செய்து வைக்கப் பார்க்கலாமா? மனசு விரும்பியதை மறைக்காமல் வெளியிட்டு உள்ளும் புறமும் ஒத்து நடந்து கொள்ள வேண்டும் என்கிறாயே! உள்ளும் புறமும் ஒத்து நடக்க வேண்டும் என்பது நல்ல காரியங்களுக்குப் பொருந்தாது. நீ ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நினைத்தால், அதை மறைக்காமல் அப்படியே செய்ய வேண்டும்; ஒரு கெட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் என்று அக்ஞானத்தினால் உன் மனம் துண்ட, அதனால் நீ ஒரு பிழை செய்துவிட்டாலும், அதிலிருந்து திருந்தாமல் அந்தப் பிழையையே எப்போதும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வது உள்ளும் புறமும் ஒத்த நடத்தையில் சேர்ந்ததாகுமா! ஒருநாளும் ஆகாது; உன்னுடைய கொள்கை எப்படி இருக்கிற தென்றால், மனிதன் ஒவ்வொருவனும், தான் நினைத்ததை எல்லாம் செய்தே தீரவேண்டும்; அது தவறாக இருந்தாலும் அதைச் செய்துகொண்டே போக வேண்டும்; அதுதான் உள்ளும் புறமும் ஒத்த நடத்தை; அவன் திருந்தி நல்ல வழிக்கு வந்தால், அது மனப்போக்குக்கு மாறான காரியம்; அப்படிச் செய்வதால் பெருத்த பாவம் உண்டாகும் என்று சொல்வது போல இருக்கிறது; இதன்படி பார்த்தால் குற்றம் செய்த மனிதர்களை நியாயஸ்தலத்தார் தண்டித்து அவர்களை நல்ல வழிக்குத் திரும்ப முயல்வதே தவறான காரியம் என்றாகிறது. நீ நல்ல ஆழ்ந்த புத்திசாலி என்று நான் இதுவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/282&oldid=646155" இலிருந்து மீள்விக்கப்பட்டது