பக்கம்:மதன கல்யாணி-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மதன கல்யாணி

வந்திருந்த கடிதத்தையும் எடுத்து நீட்டினாள். அவைகளை வாங்கிக் கொண்ட சிவஞான முதலியார், “விஷயம் இன்னதென்பதை பொன்னம்மாள் ஒருவிதமாகச் சொன்னாள். எல்லா வேலைகளை யும் உடனே நிறுத்திவிட்டுப் புறப்பட்டு வர வேண்டும் என்று உடைகளைப் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்தேன். அங்கே தற்செயலாகப் போய்க் கொண்டிருந்த சைதாப் பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரைக் கண்டேன். கண்டவுடனே, அவர் என்னுடைய அடையாளத்தைக் கண்டு கொண்டு என்னோடு பேசினார். நான் அவரிடத்தில் நின்று கால் நாழிகை நேரம் பேசிவிட்டு வர நேர்ந்தது. அதனாலே தான், நான் இங்கே வருவதற்கு இவ்வளவு தாமசமாயிற்று; இல்லாவிட்டால், கொஞ்ச நேரத்துக்கு முன்னேயே இங்கே வந்திருப்பேன். ஆனால், நான் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்ததில் முக்கியமான சில சங்கதிகள் தெரிய வந்தன. நாம் அன்றைய ராத்திரி ஆலந்துருக்குப் போய் பாலாம்பாளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தபோது திருடர்கள் வந்து நம்மை அடித்தார்கள் அல்லவா. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் போல வந்து நம்முடைய நகைகளும் வேஷ்டி புடவைகளும் இருந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஒடிப் போன மனிதர் யார் என்பதைப்பற்றி அவர்கள் நிரம்பவும் பிரயாசைப்பட்டு விசாரணை செய்தார்களாம். யாரோ ஒரு பெண் பிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் போல உடைகள் போட்டுக் கொண்டு ராத்திரிக் காலங்களில் தனியான இடங்களில் குதிரை மேலிருந்து, நம்மிடம் செய்தது போலத் தந்திரம் செய்து, சொத்துக்களை அபகரித்துக் கொண்டு போகிறாளாம். பல மனிதர்கள் இந்த மாதிரி சொத்துகளை இழந்து விட்டதாக அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் வந்து அடிக்கடி புகார் சொல்லிக் கொள்ளுகிறார்களாம். அவள் நல்ல யெளவனப் பருவமுள்ள பெண் பிள்ளையாம்; மகா தந்திரமாக எல்லாரையும் ஏமாற்றிவிட்டு எங்கேயோ போய் மறைந்து கொள்ளுகிறாளாம். அவள் நம்முடைய சொத்து முட்டையை எடுத்துக் கொண்டு போன அன்றைய தினம் காலையில் இந்த சப் இன்ஸ்பெக்டர், அந்தத் திருட்டுப் பெண்பிள்ளை ஏறிக்கொண்டு போன குதிரையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டே போனாராம்.

அவைகள் அடையாறு என்னும் ஊர் வரையில் போய் மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/286&oldid=646162" இலிருந்து மீள்விக்கப்பட்டது