பக்கம்:மதன கல்யாணி-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 போய் விட்டனவாம். அடையாற்றில் உள்ள வீடுகளில், எந்தெந்த வீட்டில் குதிரை இருக்கிறதென்று அவர் பார்த்தாராம். நாலைந்து விடுகளில் குதிரைகள் இருந்தாலும், முக்கியமாக ஒரு மனிதரின் மேலேதான் அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்றாம். சைதாப் பேட்டை ஸ்டேஷனில் சுந்தரம் பிள்ளை என்று ஓர் ஹெட் கான்ஸ்டேபில் இருந்தானாம். அவன் மகா ஜெகஜகாலப் புரட்டனாம். அவன் வேலையிலிருந்த வரையில் பெருத்த பெருத்த மோசங்களை எல்லாம் செய்து லஞ்சம் வாங்கி ஊரார் சொத்துகளை எல்லாம் கொள்ளையடித்துச் சேர்த்துக் கடைசியில் ஏதோ தவறில் மாட்டிக் கொண்டு வேலையிலிருந்து நீக்கப் பட்டானாம். அவன் அடையாற்றில் வாடகைக்கு ஒரு பங்கள வாங்கி அதில் யாரோ ஒரு வைப்பாட்டியை வைத்துக் கொண்டு இருந்து வந்தானாம். அவனும் அவனுடைய வைப்பாட்டியும் சேர்ந்து இப்படிப்பட்ட மோசங்களையும் திருட்டுகளையும் நடத்தி வருகிறார்கள் என்று போலீசார் சந்தேகப்பட்டு, அவனுடைய இருப்பிடத்தில் சோதனை போடவும், திருடப்பட்ட பொருள் வர்களைப் பிடித்துக் கைதி வாங்கினார்கள். அந்தச்

ஏதாகிலும் அகப்பட்டால், அ செய்வதற்கும் போலீசார் வாரண்டு சங்கதியை எப்படியோ அறிந்து கொன்- கந்தரம் பிள்ளை அந்த பங்களவைக் காலி செய்துவிட்டு, இடம் மாற்றிக் கொண்டு அகேயே போய்விட்டானாம். போலீசார் அ"அ” இருப்பிடம் எங்கே இருக்கிறதென்று தேடியலைத்து கொண்டிருக் கிறார்களாம். இந்த விவரங்களை எல்லாம் அந்த சப்இன்ஸ்பெக்டர் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்து, அவரிடத்தில் விடை பெற்றுக் கொண்டு வரக் கொஞ்சம் தா” விட்டது. ஒரு பெண் பிள்ளை எவ்வளவு சாமர்த்தியமாகக் திருடுகிறாள் பார்த்தீர்களா? என்று வியப்போடு மொழிந்தார்

அந்த வரலாற்றைக் ஆட்ட கல்யாணியம்மாள் பெரிதும் ஆச்சரியம் அடைந்தவளாய்: ா, கெட்ட கேடு நன்றாக இருக்கிறதே! அன்றைக்கு வந்து முட்டையைக் கொண்டு போனது பெண் பிள்ளையா ஆகா பெருத்த விநோதமாக இருக்கிறது: இதெல்லாம் இந்த ஊரில் காட்டப்படும் பயாஸ்கோப்புக்கு

நம்முடைய ஜனங்கள் போய்ப் பார்ப்பதால் ஏற்படுகிற தீம்புகள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/287&oldid=646164" இலிருந்து மீள்விக்கப்பட்டது