பக்கம்:மதன கல்யாணி-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மதன கல்யாணி

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் அவரை நோக்கி, “நானும் முதலில் இப்படித்தான் நினைத்தேன். ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன் எனக்கு இன்னொரு சங்கதி தெரிய வந்தது. அதிலிருந்து இந்தக் கடிதம் உண்மையான கருத்தோடு எழுதப்பட்டிருப்பதாக நிச்சயப்படுகிறது. துரைஸானியம்மாளோடு கூடவே இருக்கும்படி கோமளவல்லியம்மாளையும், சில தாதிகளையும் நான் இந்த இரண்டு தினங்களாக வைத்திருக்கிறேன். இன்று பொன்னம்மாளை உங்களிடத்திற்கு அனுப்பிய பிறகு நான் எழுந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போய், ஒரு ஜன்னலண்டை நின்று, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்தேன். அந்தச் சமயத்தில் பெரியவளுக்கும் சின்னவளுக்கும் இந்த விஷயமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது; துரைஸானியம்மாளுக்குக் குப்பம்மாள் என்று ஒரு தாதி இருக்கிறாள். அந்தத் தாதியின் மூலமாகவே ஏதோ கடிதப் போக்குவரத்துக்கள் நடந்திருக்கின்றன. அந்த மோகனரங்கன் இன்று அவள் மூலமாக துரைஸ்ானியம் மாளுக்கும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறானாம். இந்தச் சங்கதி அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து வெளியாயிற்று. அதற்கு ஒத்தபடி நமக்கும் கடிதம் வந்திருக்கிறது. அப்படியிருக்க, நாம் இந்த விஷயத்தில் அசட்டையாக இருக்கலாமா? நீங்கள் எப்படிச் சொன்னாலும் அப்படி நடக்க நான் சித்தமாக இருக்கிறேன்” என்றாள். அதைக் கேட்ட சிவஞான முதலியார் திகைப்பும், கவலையும் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராய்க் கால் நாழிகை நேரம் வரையில் மெளனமாக இருந்து, “துரைஸானியம்மாளுக்கும் குப்பம்மாள் மூலமாக சமாசாரம் வந்திருக்கிறதென்பதைப் பார்த்தால், இதை நாம் அசட்டை செய்யக் கூடாதென்று தான் நானும் நினைக்கிறேன். இருந்தாலும், இந்தச் சங்கதி எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இப்படி முன்னால் அறிவித்துவிட்டு, ஒரு பங்களாவில் நுழைந்து பெண்ணை பலவந்தமாக அபகரித்துப் போவதென்றால், அது சாதாரணமான காரியமா! அப்படிச் செய்யக்கூடியவன் மகா திடசாலியாகவும், பணத்திமிர் ஜனக்கட்டு முதலியவைகள் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; இந்த அற்பப் பையனுக்கு இப்படிப்பட்ட யோக்கியதை திடீரென்று எப்படி உண்டாகி இருக்கப் போகிறது. எனக்கு இன்னமும் இந்த மைனரின் மேலே தான் சந்தேகம் உண்டாகிறது; மைனருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/290&oldid=646171" இலிருந்து மீள்விக்கப்பட்டது