பக்கம்:மதன கல்யாணி-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287

துரைஸானிக்கும் உள்ள பிரியத்தினால், அவளுடைய வேண்டு கோளின் மேல், அவர் இதற்கு அனுசரணையாக இருந்து அவளை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் உண்டாகிறது. அப்படி இருந்தால், நமக்குத் தெரியாமல் ரகசியமாக இந்தக் காரியத்தைச் செய்வதை விட்டு, இப்படி மகா இறுமாப்பாக முன்னால் தெரிவித்திருப்பதன் கருத்துதான் எனக்கு விளங்கவே இல்லை. பெண்ணை அபகரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதோடு, அவன் அபார வல்லமை உள்ளவன் என்பதும் அவனுடைய கருத்தை எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும் தடுக்க முடியாதென்பதும், இந்தக் கடிதத்தின் மூலமாக நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரி செய்யப்பட்டிருப்பதன் கருத்துதான் விளங்கவில்லை. எல்லா வற்றிற்கும் நாம் எச்சரிப்பாகவே நடந்து கொள்வோம். இந்த பங்களாவில் இப்போது சுமார் இருபது வேலைக்கார ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு, பங்களாவின் நாற்புறங்களிலும் ஜாக்கிரதையாகக் காவல் காத் திருக்கும்படி வைப்போம். சைதாப்பேட்டையில், என்னுடைய சிநேகிதரான ஒரு மிராசுதார் இருக்கிறார். அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினால், அவர் சுமார் 30, 40-ஆள்கள் வரையில் அனுப்புவார். அத்தனை ஆள்களும் பங்களாவைச் சுற்றி நின்று கொண்டிருக்கட்டும். நான் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இந்த டிவிஷன் இன்ஸ்பெக்டரைக் கண்டு, அவரிடத்தில் இந்தக் கடிதத்தைக் காட்டி, சில போலீஸ் ஜெவான்களை அனுப்பிக் காவல் காக்கும்படி ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன். இந்த விஷயமோ எவருக்கும் தெரியாதபடி மறைத்து வைக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம். நடந்த சங்கதிகளை எல்லாம் நாம் அப்படியே வெளிப்படுத்தாவிட்டாலும், ஒரு மாதிரியாக மாற்றியாகிலும் சொல்லியே தீரவேண்டியிருக்கிறது. ஏனென்றால், இதற்கு ஏராளமான மனிதர்களுடைய சகாயம் நமக்கு அவசியமாக வேண்டியிருக்கிறது. என்ன செய்கிறது! ஆபத்துச் சமயத்தில் மானம் அவமானம் பார்க்க முடிகிறதா என்றார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த கவலையும் கிலேசமும் அடைந்தவளாய், “என்ன சங்கடம் இது இந்தப் பெண்

H.&.H-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/291&oldid=646172" இலிருந்து மீள்விக்கப்பட்டது