பக்கம்:மதன கல்யாணி-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29?

இருந்த உக்கிரத்தைக் கண்ட சிவஞான முதலியார் மேலும் அவனிடத்தில் பேச அஞ்சித் தயங்கி, “ஐயாவுடைய பெயரென்ன” என்றார். அதைக் கேட்ட ஜெவான் மிகவும் எரிச்சலாக, “அடெ நீ யாரைய்யா இப்ப வந்து பூசெ வேளெயிலே கரடியேவிட்டு ஒட்டரே போய்யா அப்பாலெ அவரோட பேரு குலாம்ராவுத்தரு. இது தெரியாதா!” என்றான்.

அதற்குள் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவ்விடத்தை விட்டு அப்பால் போகும் கருத்தோடு குதிரையைத் திருப்பியதைக் கண்ட சிவஞான முதலியார் மெல்ல நடந்து இன்ஸ்பெக்டருக் கெதிரில் போய் நின்று புன்னகை அரும்பிய முகத்தோடு அவருக்குச் சலாம் செய்து, “உங்களுக்கு என்னுடைய அடையாளம் தெரிகிறதா? நீங்கள் என்னை அடிக்கடி போலீஸ் கோர்ட்டில் பார்த்திருப்பீர்கள். என்னை வக்கீல் சிவஞான முதலியார் என்று சொல்லுவார்கள்” என்று நயமாகக் கூறினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்போதே துக்கத்திலிருந்து விழிப்பவர் போல எங்கேயோ சென்றிருந்த தமது மனதைச் சடக்கென்று அங்கே திருப்பி அவரைப் பார்த்துப் புன்னகை செய்த வண்ணம், “ஒகோ! அப்படியா! சிவஞான முதலியாரா! பார்த்திருப்பேன். ஆனால் எனக்கு அவ்வளவாக ஞாபகம் உண்டாகவில்லை” என்றார்.

சிவஞான:- இதோ தெரிகிறதே. இது மாரமங்கலம் ஜெமீந்தாரு டைய பங்களா. இதிலிருந்து நான் இப்போது தான் புறப்பட்டு, நிரம்பவும் அவசரமான ஒரு காரியத்தின் பொருட்டு போலீஸ் கமிஷனருடைய கச்சேரிக்குப் போய், இந்த டிவிஷன் இன்ஸ் பெக்டரைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி வந்தேன். தெய்வச் செயலாக நீங்கள் இவ்விடத்திலேயே அகப்பட்டுவிட்டீர்கள் - என்று விநயமாகக் கூறினார். -

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியானால் உங்களுடைய காரியம் ஜெயமாகும் என்பதற்கு இது நல்ல அறிகுறிதான். நான் ஒர் அலுவலின் மேல் போய்க் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் பரவாயில்லை; நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

உடனே சிவஞான முதலியார் இன்ஸ்பெக்டரை சிறிது தூரம் தனியாக அழைத்துப் போய், மாரமங்கலத்தாரது வரலாற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/295&oldid=646180" இலிருந்து மீள்விக்கப்பட்டது