பக்கம்:மதன கல்யாணி-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293

அவ்வாறு அவர்கள் மூவரும் சென்று பக்கத்திலிருந்த மாரமங்க லத்தாரது பங்களவை அடைந்து உள்ளே சென்றனர்; சிவஞான முதலியாரும் இன்ஸ்பெக்டரும் கீழே இறங்கி ஜெவானை வெளியிலேயே நிற்க வைத்துவிட்டுக் கட்டிடங்களுக்குள்ளே சென்றனர். கால் நாழிகை நேரத்திற்குள் அந்த மாளிகையின் உட்புறத்தில் ஓரிடம் விடாமல் எல்லாவற்றையும் சிவஞான முதலியார் இன்ஸ்பெக்டருக்குக் காட்டியதன்றி, கல்யாணியம் மாளையும் அவளது அந்தப்புரத்திற்குள் வரச் செய்து, இன்ஸ் பெக்டரை அந்தச் சீமாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரது அபிப்பிராயத்தைக் கேட்க, இன்ஸ்பெக்டர் சிறிது யோசனை செய்தவராய் அவரை நோக்கி, “கடிதம் எழுதப் பட்டிருக்கும் தோரணையைப் பார்த்தால், பெருத்த கலகம் உண்டாகும் போலத் தோன்றுகிறது; ஆனால் இன்று பகலில் கலகம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை; சாயுங்காலம் ஆறுமணிக்குத் மேல் ஒன்பது மணிக்குள்ளாகவே கலகம் நடக்கும் என்று யூகிக்க வேண்டியிருக்கிறது; உங்களுடைய ஆள்களான ஐம்பது அறுபது ஆள்களையும் சாயுங்காலம் வரையில் மறைவாகவே வைத்து வையுங்கள் அதற்கு மேல் அங்கங்கே நிறுத்தி வைக்கலாம்; நான் இப்போது இந்த ஜெவானை ஸ்டேஷனுக்கு அனுப்பி இன்னும் சில ஜெவான்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, இந்த பங்களாவுக்குள் ஒரு பக்கத்தில் மறைவாக இருக்கிறேன். இன்று சாயுங்காலம் ஆறு மணிக்குத் தபால் பெட்டியண்டையில் ஓர் ஆளை அனுப்புவதாக இந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிற தல்லவா? அவன் வருகிறானா என்பதைக் கவனிப்போம். வராவிட்டால், இந்தக் கடிதம் அநேகமாகப் பொய்யான கடிதம் என்றே நாம் யூகித்துக் கொள்ளலாம்; ஆள் வரும் பட்சத்தில், அவனைத் தந்திரமாகப் பிடித்துக் கொண்டு வந்து உண்மையை அறிந்து கொள்வோம். அதற்கு மேல் எதிரியின் பலாபலத்தை அறிந்து கொண்டு, அதற்குத் தேவையானபடி எத்தனை ஜெவான்களை வேண்டுமானாலும் நான் வரவழைக்கிறேன். நீங் கள் இதைப்பற்றி இனிக் கொஞ்சமும் கவலைப்படவேண்டாம் எத் தனை ஆயிரம் ஆள்கள் வந்தாலும் வரட்டும். துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடச் செய்கிறேன். பெண்ணை அழைத்து வைத்துக் கொண்டு ஜெமீந்தாரிணி அம்மாள் இந்த அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/297&oldid=646183" இலிருந்து மீள்விக்கப்பட்டது