பக்கம்:மதன கல்யாணி-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மதன கல்யாணி

புரத்திலேயே இருக்கட்டும். நீங்களும் நானும் வேறொரு தனியான அறையில் இருப்போம். அது மேன் மாடத்தில் உள்ள அறையாக இருக்க வேண்டும்; அங்கே இருந்து நாம் நாற்புறங்களையும் பார்க்க அனுகூலமான அறையாக இருக்க வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட மற்ற இருவரும் அப்படியே செய்வோம் என்று கூறி அதை ஏற்றுக் கொண்டார்கள்.

உடனே சிவஞான முதலியார் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு மேன் மாடத்திற்குப் போய், அங்கே இருந்த அனுகூல மான ஓர் அறையில் சோபா நாற்காலி மேஜைகள் முதலிய வற்றைப் போடச் செய்து, அங்கே அவரை இருக்கச் செய்தார். அவரது விருப்பத்தின்படி போலீஸ் ஜெவானை உள்ளே அனுப்பிவிட்டு சிவஞான முதலியார் கீழே சென்றார்.

அதன் பிறகு ஒரு நாழிகை நேரத்தில் அவர்களது ஏற்பாடுகள் எல்லாம் சரியாக முடிவுற்றிருந்தன. கல்யாணியம்மாள் தந்திரமாகத் தனது குமாரத்திகள் இருவரையும் தனது அந்தப்புரத்திற்கே வரவழைத்து வைத்துக் கொண்டதன்றி, எல்லா வேலைக்காரிகளை யும், அந்த அந்தப்புரத்திற்குப் பக்கத்தில் உள்ள அறைகளில் ஆயத்தமாக வந்திருக்கும்படி செய்துவிட்டு, மிகுந்த கவலையும் திகிலும் ஆவலும் கொண்டு, “என்ன நடக்குமோ! என்ன நடக்குமோ!” என்று தியானம் செய்த வண்ணம் நெருப்பின் மேல் இருப்பவள் போலத் துடித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் சைதாப்பேட்டையில் இருந்து நாற்பது ஆட்கள் வந்து சேர்ந்தார்கள்; சிவஞான முதலியார் மொத்தத்தில் அந்த பங்களாவி லிருந்த அறுபது ஆட்களையும் அன்று சாயுங்காலம் வரையில் வெளியில் வந்து தலைகாட்டாமல் மறைவான ஓர் இடத்திலேயே இருக்கும்படி சொல்லி எச்சரித்துவிட்டு, அவர் களுக்கெல்லாம் தேவையான ஆகாராதிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு இளநீர், பழங்கள், சிற்றுண்டிகள், காப்பி, சோடா முதலிய சகலமான வஸ்துக் களையும் வருவித்து இன்ஸ்பெக்டரது அறைக்கு அனுப்பிவிட்டு, மாறிமாறி அங்குமிங்கும் போய் எல்லோரையும் எச்சரித்த மணியமாக ஒய்வின்றி அலைந்து கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் தம்மோடு வந்த ஜெவானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/298&oldid=646185" இலிருந்து மீள்விக்கப்பட்டது