பக்கம்:மதன கல்யாணி-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மதன கல்யாணி

மணியாயிற்று. போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவஞான முதலியாரை அழைத்து அவரிடத்தில் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, அதற்கு முன்னாலேயே தருவித்து வைத்துக் கொண்டிருந்த சில வஸ்திரங் களை எடுத்து அணிந்து கொண்டார். அவர் தமது போலிஸ் உடைகளை எல்லாம் தரித்துக் கொண்டிருந்தார் ஆனாலும், ஒரு வஸ்திரத்தை எடுத்து இரண்டாக மடித்துத் தமது இடுப்பில் கட்டிக் கொண்டார்; இன்னொரு சால்வையை எடுத்து தலை உடம்பு முதலிய அவயங்களை எல்லாம் போர்த்தி முகத்தைத் தவிர மற்ற பாகங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு வெளியில் போய் பங்களாவின் அப்புறத்தில் ராஜபேட்டையின் மேலிருந்த தபாற் பெட்டியண்டை நின்ற ஆல மரத்தின் மறைவில் சுருட்டி முடக்கிக் கொண்டு முகம் தெரியாமல் நாய் போலத் தரையில் படுத்துக் கொண்டிருந்தார்; அவர் அங்கே வரும் போதே, ஜெவான்கள் ஏறி ஒளிந்து கொண்டிருந்த மரத்தண்டை போய், சிவஞான முதலியார் கனைத்துக் கொண்டால், உடனே வந்துவிட வேண்டும் என்று சொல்லி விட்டு வந்து மரத்தடியில் முன் சொல்லப்பட்டபடி படுத்திருந்தார். அந்த ராஜபாட்டையில் ஜன நடமாட்டம் அதிகமாக இல்லையாகையால், அப்போதைக் கப்போது இரண்டொரு குதிரை வண்டியோ மோட்டார் வண்டியோ, போய்க்கொண் டிருந்ததன்றி, இரண்டொரு தனித்து வழிப்போக்கரும் போய்க் கொண்டிருந்தனர்; அப்படி வந்த வண்டியாவது மனிதராவது தபாற் பெட்டியண்டை நிற்கவில்லை; மணி சரியாக ஆறாயிற்று; அப்போது அந்த ராஜபாட்டையின் வழியாக ஓடி வந்து கொண்டிருந்த ஒரு குதிரை வண்டி, தபாற் பெட்டியண்டையில் வந்தவுடனே சடக்கென்று நின்றது; அதற்குள் இருந்து ஒருவர் கீழே இறங்க, அந்த வண்டி உடனே திரும்பி விரைவாகப் போய்விட்டது. அங்கே இறக்கி விடப்பட்டது ஒரு பெண்பிள்ளை, அவள் குள்ளமும் கட்டையுமான உடம்பைக் கொண்டிருந்தாள் ஆனாலும், நிரம்பவும் வயதான கிழவி போல ஒரு கோலை ஊன்றிக் கொண்டு சிறிதளவு குனிந்து நடந்த வண்ணம் தபாற் பெட்டியண்டை போய் உட்கார்ந்து கொண்டாள்; அவள் ஒரு பெரிய துப்பட்டியால் தலை முதல் கால் வரையில் நன்றாக மூடி எந்த பாகமும் வெளியில் தெரியாதபடி தன்னை மறைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/300&oldid=646192" இலிருந்து மீள்விக்கப்பட்டது