பக்கம்:மதன கல்யாணி-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 301

ஆகையால் அங்கே போவதில் உபயோகமில்லை. நான் சொன்னதுதான் நிஜம். வேறே எந்தச் சங்கதியும் தெரியாது. என்னை விட்டுவிடுங்கள். நான் போக வேண்டும்” என்று கூறிய வண்ணம் நின்று வந்த வழியிலேயே திரும்பி நடக்கலானாள்.

அவளது ஜெகஜால வித்தையைக் கண்டு பெரிதும் கோபம் கொண்ட இன்ஸ்பெக்டர், “ஆகா! நீ கற்ற வித்தையை எல்லாம் காட்டுகிறாயா கோஷாப் பெண்பிள்ளையாக இருக்கிறாயே என்று நான் கொஞ்சம் மரியாதை பார்த்தால், நீ எங்களை ஏய்த்துவிட்டுப் போகவா பார்க்கிறாய்! உன்னைக் கொண்டு போய் மறைவான இடத்தில் வைத்துக் கொண்டு நன்றாக அடித்தால், தானாக நிஜம் வெளியில் வரும். எங்கே போகிறாய்? நில் அப்படியே” என்று கூறிய வண்ணம் மறுபடியும் அவளது துப்பட்டியைப் பிடித்து, “பங்களாவுக்குள்ளே போகலாம் வா” என்று இழுத்தார்.

அவள் உடனே முறைப்பாக நிமிர்ந்து பார்த்து, “ஏன் ஐயா, என்னை இப்படித் தொட்டு இழுக்கிறாய்! நீ முசல்மானாக இருந்தும் கொஞ்சம்கூட ரோஷமில்லாமல் கோஷாப் பெண் பிள்ளையைத் தொட்டு இழுக்கிறாயே! நான் என்ன குற்றத்தைச் செய்துவிட்டேன்? எந்தச் சட்டத்தின்படி குற்றம் செய்தேன்? அதைச் சொன்னால் தான் நான் வருவேன்; சொல்லாவிட்டால் நான் வரமாட்டேன்” என்றாள். -

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிகமான கோப மடைந்தவராய், “ஒகோ இவ்வளவு தூரம் சட்டம் படிக்கிறவளான நீ தான் பிச்சைக்காரியோ! நீ பலே வேஷக்காரி என்பது நன்றாகத் தெரிகிறது. நீ செய்த குற்றம் என்ன என்பதைச் சொல்லாவிட்டால் நீவரமாட்டாயோ? இந்த பங்களாவில் உள்ள ஒரு சிறு பெண்ணை பலவந்தமாக அபகரித்துக் கொண்டு போகும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதான குற்றத்தை நீ செய்கிறாய். ஆகையால் உன்னைக் கைதியாக்கி இருக்கிறோம். நீ பேசுகிற டிக்கைப் பார்த்தால் நீ கோஷாப் பெண்பிள்ளை அல்லவென்றே நான் நினைக்கிறேன். ஆகையால், நீ உண்மையை எல்லாம் சொல்லுகிற வரையில் நான் உன்னை விடப்போகிறதில்லை. உன்னை இந்த பங்களாவுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டு பெண் பிள்ளைகளை விட்டு, உன் துப்பட்டியை விலக்கச் செய்து நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/305&oldid=646201" இலிருந்து மீள்விக்கப்பட்டது