பக்கம்:மதன கல்யாணி-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 மதன கல்யாணி

கோஷா ஸ்திரியா என்பதைப் பார்க்கச் செய்கிறேன்” என்று கூறிய வண்ணம் அவளது துப்பட்டியைப் பிடித்து அவளைப் பரபர வென்று இழுத்துக் கொண்டு பங்களாவிற்குள் போக, மற்றவர்கள் மிகுந்த வியப்பும் கலக்கமும் அடைந்து கூடவே தொடர்ந்து சென்றனர். அந்தத் துருக்க ஸ்திரீ அப்போதும் ஓங்கிப் பேசிக் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்து, “நீங்கள் என்னை எங்கே வேண்டுமானாலும் கொண்டு போய்ப் பாருங்கள். நான் பிச்சைக்கார கோஷாப் பெண்பிள்ளை என்பதை நான் ருஜூப்படுத்துகிறேன். இந்த பங்களாவில் உள்ள சின்னப் பெண்ணை நான் எப்போது கண்டேன்? இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி என்னை வதைக்கிறீர்களா இருக்கட்டும்; உங்களை நான் இலேசில் விடப்போகிறதில்லை. ஆகட்டும்; ஒரு கை பார்க்கலாம்” என்று பலவாறு பிதற்றிக் கொண்டே போனாள். அடுத்த நிமிஷம் அவர்கள் பங்களாவின் கட்டிடங்களை அடைந்தனர். அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்கள் எல்லோரும் ஒன்றுகூடி எதிரியைச் சேர்ந்த ஒரு பெண்பிள்ளையைப் போலீசார் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து, அவள் ஏதோ பெருத்த குற்றம் செய்துவிட்டதாக யூகித்துக் கொண்டு அவளை அடிக்க வேண்டும் என்றும், உதைக்க வேண்டும் என்றும், கொல்ல வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் சொல்லிப் பதைபதைத்து அங்கே வந்து சூழ்ந்து கொண்டனர். அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அவர்களை எல்லாம் முன் போல மறைவில் போய் இருக்கும்படி செய்துவிட்டு, அந்த கோஷா ஸ்திரியை இழுத்துக் கொண்டு, மற்றவர்களோடு உட்புறத்தில் சென்று, தனியான ஓர் அறைக்குப் போய், அவளை மாத்திரம் அங்கே இருக்கச் செய்து வெளியில் வந்து, நாலைந்து வேலைக் காரிகளை அழைத்து உள்ளே இருந்த பெண் பிள்ளையின் துப்பட்டியையும் முகமூடியையும் எடுத்து விட்டு அவளது உடம்பின் அங்க மச்ச அடையாளங்களையும், அவளது வயதையும் அறிந்து வரும்படி கூறி அனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண்பிள்ளைகள் உள்ளே போய் அரைக்கால் நாழிகை நேரம் இருந்துவிட்டு வெளியிலே வந்து, “ஐயா! அவள் மிகவும் பொல்லாதவளாக இருக்கிறாள்; அவளுடைய துப்பட்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/306&oldid=646204" இலிருந்து மீள்விக்கப்பட்டது