பக்கம்:மதன கல்யாணி-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 303 .

எடுக்க அவள் சுல்பத்தில் இடங்கொடுக்கவில்லை. நாங்கள் பலவந்தமாகவே அதை எடுத்தோம்; அவள் துருக்கஜாதிப் பெண் பிள்ளையல்ல; முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறாள். நல்ல அழகான பதினெட்டு வயசுக் குமரியாக இருக்கிறாள். தமிழரைச் சேர்ந்த பெண்பிள்ளையாகக் காணப்படுகிறாள்” என்றார்கள்.

அப்போது அங்கே இருந்தவர்களான இன்ஸ்பெக்டர், சிவஞான முதலியார், கல்யாணியம்மாள் ஆகிய மூவரும் அதைக் கேட்டு மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்தவர்களாய் வேலைக்காரிகளை வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று பார்க்க, வேலைக்காரிகள் சொன்னது நிஜமாகவே இருந்தது; சிவஞான முதலியார் அந்தப் ப்ெண்ணைக் கண்டு சகிக்க ஒண்ணாத பிரமிப்பும் கொதிப்பும் அடைந்தவராய், “ஆ! ராஜாயி! நீ இவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா ஆகா! என்ன ஆச்சரியம் போன வருஷம் ஒன்றையும் அறியாத பைத்தியக்காரியாக இருந்த நீ இதற்குள் எப்படி மாறிப் போயிருக்கிறாய் ராஜாயி இது என்ன முட்டாள் காரியம்! உன்னுடைய தம்பி சிறுபிள்ளைத் தனத்தினால் தவறான ஒரு காரியத்தைச் செய்து விட்டாலும், அவனுக்கு அக்காளாக இருக்கும் நீ அவனுக்குத் தக்க புத்திமதிகளைச் சொல்லி அவனை நல்ல வழிக்குக் கொண்டு வருகிறதா? நீயும் அவனுக்கு அனுசரணையாக இருந்து, இப்படிப்பட்ட மோசங்களில் எல்லாம் இறங்குகிறதா? இப்படிக் கடிதம் எழுதியனுப்பி இருக்கிறீர்களே: யாருடைய துர்போதனையைக் கொண்டு இப்படி எழுதினர்கள்? அப்படி போதித்தவன் யாராக இருந்தாலும் உங்களுடைய எண்ணம் நிறைவேறுமாறு நினைத்துக் கொண்டாயா? ஆகா! அக்காள் தம்பி ஆகிய நீங்கள் இருவரும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவர்களாக இருக்கிறீர்களே! உன்னுடைய தம்பியை நான் இவர்களிடத்தில் கொண்டு வந்து விட்டு அநாதைப் பையன் என்று சொல்லி எவ்வளவோ வேண்ட, இவர்கள் தயவாக அவனை வைத்துக் கொண்டு வந்திருக்க, அவன் இங்கேயே அயோக்கியத்தனமாக நடந்து கொண்டான் அல்லவா! அது போனாலும் போகட்டும் என்று அவனை நான் செங்கல்பட்டுக்கு அனுப்பினால் அங்கே போகாமல் நடுவழியிலேயே திரும்பி வந்து, உன்னோடு சேர்ந்து கொண்டு இப்படிப்பட்ட தலைப்பாகை

ம.க.1-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/307&oldid=646206" இலிருந்து மீள்விக்கப்பட்டது