பக்கம்:மதன கல்யாணி-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 மதன கல்யாணி

மாற்றிக் காரியம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறான்! நீயும் அதற்கு அநுசரணையாக இருந்து அவனைவிட அதிகமாக நீயும் மாயாவி வித்தையெல்லாம் செய்கிறாய்! குழந்தைப் பருவத்தி லிருந்து உங்களை வளர்த்து ஆளாக்கி பிழைப்புக்கும் வழி செய்து கொடுத்த மனிதனான என்னிடத்திலேயே நீங்கள் உங்களுடைய காட்ட ஆரம்பித்தது தான் மிகவும் மெச்சக் கூடியதாக இருக்கிறது. நீங்கள். எப்படிப்பட்ட கீர்த்தியும் நல்ல பெயரும் சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள்: உங்களை நான் வளர்த்துக் காப்பாற்றியதற்கு இதைவிட வேறே சன்மானம் வேண்டுமா? ஆகா ராஜாயீ உன்னைப் பார்க்கக் கண் கூசுகிறது” என்றார்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், “ஓகோ அப்படியா! இவள் தான் அந்தப் பையனுடைய அக்காளோ இருந்தாலும் இப்படிப் பட்ட அக்காளல்லவா இருக்க வேண்டும்! கொஞ்ச நேரத்துக்குள் நல்ல அசல் துருக்கப் பெண்பிள்ளை போலவே நாடகம் ஆடி விட்டாளே! என்ன சாகசம்! என்ன சாமர்த்தியம்! ராஜாயி அம்மா! மெக்சினேன்! மெச்சினேன்’ என்றார். கல்யாணியம்மாள் அவளை நோக்கி, “முழிக்கிற முழியைப் பாருங்கள். காக்கை பிடிக்கிற குறத்தி போல இருக்கிறாள் கொஞ்ச நாழிகைக்குள் எவ்வளவு ஆடம்பரம் செய்துவிட்டாள்; இவள் ஓலமிட்டு அழுததும், சட்டம் பேசினதும், பிச்சைக்காரி போல நடித்ததும் நிஜம் போல இருந்ததே ஆகா! இவள் தற்கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டாள் இவளை என்ன செய்தாலும் பாவம் ஏற்படாது” என்றாள். -

அந்த வார்த்தைகளை அசட்டையாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாயி அம்மாள் அவர்களை எல்லாம் நிரம்பவும் அலட்சியமாகப் பார்த்து, “சரி, நீங்கள் மூன்றுபேரும் எனக்குக் கொடுத்த புகழ்ச்சிப் பத்திரங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டேன். என்னால் ஆக வேண்டிய காரியம் இவ்வளவு தானே? நான் இனிமேலாவது போகலாம் அல்லவா?” என்றாள்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், “உன்னை இவ்வளவோடு விட்டு விடுவதற்காகவா நாங்கள் உன்னை இங்கே கொண்டு வந் தோம். நீ மரியாதையாக நிஜத்தைச் சொல்லிவிடப் போகிறாயா? அல்லது, நல்ல உடம்பை வீணில் கெடுத்துக் கொள்ளப் போகிறாயா? இந்தக் கடிதத்தை அனுப்பியது யார்? அவர் எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/308&oldid=646207" இலிருந்து மீள்விக்கப்பட்டது