பக்கம்:மதன கல்யாணி-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 305

இருக்கிறார்? உங்களுடைய எண்ணம் என்ன என்கிற விவரங் களை எல்லாம் நீ சொல்லிவிடு; உன்னை நாங்கள் இன்றைய ராத்திரி முழுதும் இங்கேயே வைத்திருந்து, நீ சொன்னது உண்மைதானா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, நாளைய காலையில் உன்னை உன்னுடைய இருப்பிடத்துக்கு அனுப்பி விடுகிறோம். சொல்லாவிட்டால், நீ உபத்திரவத்துக்கு ஆளாவதோடு, இன்றைய ராத்திரி இங்கே வர உத்தேசித்திருக்கிற மனிதர்களும் துன்பத்தில் மாட்டிக் கொள்வார்கள்” என்றார்.

அதைக் கேட்ட ராஜாயி அம்மாள் நிரம்பவும் அலட்சியமாக அவரைப் பார்த்து, “இன்று ராத்திரி யாராவது பெண்ணை அபகரித்துக் கொண்டு போவதற்காக இங்கே வந்தால், உங்களுக்குச் சாமர்த்தியம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர் களை இங்கேயே பிடித்துக் கொள்ளுங்கள். அவர்கள் யார் என்பது முதலான விவரம் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தாலும், நான் அதை வெளியிடக் கடமைப் பட்டவள் அல்ல; அந்த விவரத்தை எல்லாம் நான் வெளியிடா விட்டால் அது எந்தச் சட்டத்தின்படி குற்றமாகிறதென்பதும் தெரியவில்லை. நான் சம்பந்தப்பட்ட வரையில் இப்போது என்மேல் என்ன குற்றமோ அதற்கு நீங்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்னை வெளியில் விட்டாலும் சரி; விடாவிட்டாலும் சரி; உங்களுடைய பிரியப்படி செய்து கொள்ளலாம்” என்றாள். அதைக் கேட்ட எல்லோரும் மிகுந்த பிரமிப்பும் வியப்பு மடைந்தனர். அவ்வளவு யெளவனப் பருவமும் அழகும் உடைய அந்த ஸ்திரீ ஓர் ஆண்பிள்ளையை விட அதிக மனோதிடமும் அஞ்சாமையும் பெற்றிருந்ததைக் காண அவர்கள் பெரிதும் ஆச்சரியமடைந்தனர். -

உடனே சிவஞான முதலியார் அவளை நோக்கி அன்பான குரலில் பேசத் தொடங்கி, “ராஜாயி என்னைக்கூட நீ அலட்சிய மாகத்தான் நடத்தப் போகிறாயா? பசிை” விசுவாசத்தையும், அன்பையும், நன்றியையும் சுத்தமாக மறந்து விட்டாயா? முகமறியாத அன்னிய மனிஷி போல நீ என்னிடத்தில் நடந்து கொள்வது எனக்கு நிரம்பவும் ஆச்சரிய” இருக்கிறது. இது வரையில் நடந்தது நடந்து போய்விட்டது. அ? எல்லாம் நாங்கள் பாராட்டுவதில்லை. நீங்கள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/309&oldid=646209" இலிருந்து மீள்விக்கப்பட்டது